எகிறும் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்: சாப்பிட்டு பாருங்க
)
கினோவாவில் புரதச்சத்தும் மெக்னீசியமும் மிக அதிகமாக உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி ஆரோக்கியமற்ற பசியை குறைக்க உதவுகின்றது. ஆகையால் எடை கட்டுப்பட்டில் உள்ளவர்கள் இதை அவ்வப்போது உட்கொள்ளலாம்.
)
மஞ்சளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் குர்குமின் உள்ளது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கெட்ட கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றது. இதனால் கெட்ட கொழுப்பின் அளவும் குறைகிறது. இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவியாக இருக்கின்றது.
)
முழு தானியங்களில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ளன. இவற்றில் வெள்ளை அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எந்தவித தானியங்களையும் சேர்க்கக்கூடாது. பழுப்பு அரிசி, ராகி, சோளம், ஓட்ஸ், தினை வகைகள் போன்ற முழு தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதோடு தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.
இனிப்பான உணவுகளுக்கு மாற்றாக பழங்களை உட்கொள்ளலாம். இவற்றில் இயற்கையான சர்க்கரை அளவு மிதமாக இருப்பதோடு, இவை இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்காது. மேலும் பழங்களில் நார்ச்சத்தும் உடலுக்கு பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளன.
இலவங்கப்பட்டை சமையலறையில் இருக்கும் மசாலாக்களில் அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள மசாலாவாக உள்ளது. இது கலோரிகளை வேகமாக எரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.
மிளகு செரிமானத்தை சீராக்கி உடல் உப்பசம், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறுகள் ஆகியவற்றை தவிர்க்க உதவுகின்றது. வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் மிளகு, தொப்பை கொழுப்பை கரைக்கவும், கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கின்றது.
பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, ராஜ்மா, பட்டாணி, காராமணி போன்றவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதோடு, இவற்றில் புரதச்சத்துக்களும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸும் அதிகமாக உள்ளன. இவை செரிமானத்தை சீராக்கி எடையை பராமரிக்க உதவுகின்றன.
சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கலோரிகளை வேகமாக எரிக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
இந்த உணவுகளுடன் நாள் முழுதும் சமச்சீரான உணவு, போதுமான உடல் செயல்பாடுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிக அவசியமானவை. இவை அனைத்தையும் சேர்த்து ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்தால், உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.