படுத்தி எடுக்கும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் சூப்பர் உணவுகள்
)
பல இயற்கையான வழிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளே இதில் நமக்கு உதவுகின்றன. இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில இயற்கையான எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
)
நெல்லிக்காய்: நெல்லிக்காயில் குரோமியம் உட்பட பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குரோமியம் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கனிமமாகும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
)
வேம்பு: வேப்பிலை, வேப்பம்பூ, வேம்பு பொடி ஆகியவை நீழிரிழிவு நோயை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவுகின்றன. இவை விரைவாக இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன. சர்க்கரை நோய் இருப்பவர்கள் வேப்பம்பூ சாற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.
நாவல் பழம்: நாவல் பழத்தில் ஜாம்போலின் என்ற கலவை உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது நாவல் பழத்தை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நீரிழிவு நோயாளிகள் கிலோய் சாறு குடிக்க வேண்டும். இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கிலோயின் இலைகள் மற்றும் தண்டுகள் கொண்டு இதன் சாறை உருவாக்கலாம். கிலோய் சுகர் நோயாளிகளுக்கு மிக நல்லதாக கருதப்படுகின்றது.
இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ள மசாலாவாக கருதப்படுகின்றது. இந்த மசாலா இன்சுலின் அளவுகளை சரி செய்யும் என பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. சுகர் நோயாளிகள் தினமும் இலவங்கப்பட்டையை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இலவங்கப்பட்டை தேநீர் அல்லது தண்ணீர் குடிக்கலாம்.
பாகற்காய்: பாகற்காய் உடலில் இரத்த சர்க்கரையை குறைக்க உதவியாக இருக்கும். ஏனெனில், பாகற்காயில் சர்க்கரை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. தினமும் காலையில் பாகற்காய் சாறு குடிப்பது நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
ஆளிவிதை: ஆளிவிதையில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. ஆளி விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும்.
கிராம்பில் பல வித அரோக்கிய நன்மைகள் உள்ளன. இது பல உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் கிராம்பில் அதிகமாக உள்ளன. இது இன்சுலின் சென்சிடிவிடியையும் மேம்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் கிராம்பு உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.