சுகர் லெவலை சூப்பரா கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்: நோட் பண்ணுங்க மக்களே
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை சுகர் நோயாளிகள் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகள் (சூப்பர்ஃபுட்கள்) பற்றி இங்கே காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் மற்றும் ப்ரீ டயாபடிக் நோயாளிகள் தங்கள் உணவில் அவ்வப்போது நாவல் பழத்தை சேர்க்க வேண்டும். நாவல் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது. ஜாமுன் விதை தூள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் ஒரு சஞ்சீவியாக கருதப்படுகின்றது.
தக்களி உட்கொள்வதால் உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதுடன் இன்னும் பல வித சத்துகளும் கிடைக்கின்றன. இதில் உள்ள கூறுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தொடர்ந்து பராமரிக்க உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகளின் ஆற்றல் குறையாமல் இருப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கொட்டைகள், உலர் பழங்கள் மற்றும் விதைகளை உட்கொள்ள வேண்டும். இவை ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக காணப்படுகின்றன. பசியைத் தீர்ப்பது மட்டுமின்றி, இவை இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், சியா விதைகள், பாதாம் மற்றும் முந்திரி ஆகியவற்றை அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ப்ரோக்கோலி, கீரை, முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கற்றாழையில் பல வித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இது நமது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் கற்றாழையில் காணப்படுகின்றன. இதன் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நமது செரிமானத்தையும் சரியாக வைக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் முழு தானியங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். முழு கோதுமை, ஓட்ஸ், குயினோவா (கினோவா) மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை இதில் அடங்கும். இந்த உணவுகள் உடலில் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை சேர்க்க வேண்டும். அவற்றில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளன. அவற்றின் கிளைசெமிக் குறியீடும் மிக குறைவு. இந்த உணவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இவற்றை உட்கொள்வதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.