தோல் சுருக்கம் வயதான தோற்றத்தை உண்டாக்கிவிட்டதா? இளமைக்கு திரும்ப சூப்பரான டிப்ஸ்

Mon, 28 Oct 2024-10:21 pm,

அழகான முகத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வறண்ட சருமம், கண்களின் கீழ் வரும் கருவ ளையம், களையிழந்த முகம், உஷ்ணக்கட்டிகள் இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் வந்து அழகை கெடுக்கும். அதனை தடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.ஒவ்வொருவர் உடல்நிலையைப் பொறுத்து பருக்கள் தீவிரமாகவோ அல்லது வந்து போகும் விருந்தினர்போலவோ இருக்கும். வெகு சிலருக்கு நிரந்தர பிரச்சனையாக உருமாறும். அதற்கு காரணம் போதிய ஆரோக்கியமும், பராமரிப்பும் இன்மையே என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கூடுதல் கவனத்தோடு பராமரித்தால் சரிசெய்துவிடலாம். ஆனால் மிருதுத்தன்மை குறைந்து சுருக்கம் உண்டாகிவிட்டால் உடனடியாக பராமரிப்பு தேவை.

இல்லையென்றால் வயது கூடும்போது உண்டாகும் சரும சுருக்கம் இளவயதிலேயே உண்டாகி விரைவில் மூப்பு தோற்றத்தை உண்டாக்கும். சுருக்கத்தை தடுக்கும் பராமரிப்பை மேற்கொள்ளாமல் மாறாக அதை மறைக்க நீங்கள் செய்யும் அதிகப்படியான மேக்கப் எந்தவிதமான பலனும் அளிக்காது. மாறாக அந்த சுருக்கத்தை மறைக்கவு ம் முடியாது. அவை மேக்கப்பை மீறி தெளிவாக தெரியும்

குறிப்பாக கண்கள், கன்னங்கள், வாய்ப்ப குதிகளில் அந்த சுருக்கங்கள் தெளிவாக தெரியும். வயதான பிறகு சுருக்கங்கள் உண்டாவது இயற்கை. நமது சருமத்தில் இருக்கும் கொலாஜன், எலாஸ் டின் குறைந்து தசைகளை தளர செய்வதால் சருமத்தின் இறுக்கம் தளர்ந்து விரிவடைகிறது. சருமத்தின் கடைசி அடுக்கில் இருக்கும் எபிடெர்மிஸ் செல் உற்பத்தி சீராக இருக்கும் வரை சருமத் தில் சுருக்கங்கள் விளைவதில்லை இவற்றின் உற்பத்தி குறையும் போது சருமத்தில் சுருக்கங்கள் எட்டிபார்க்க தொடங்குகிறது

இது வயதானால் வருவது இயல்பு. ஆனால் இளவயதில் இந்த சுருக்கம் வருவதற்கு காரணம் முறையான பராமரிப்பின்மையே என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள். இவைதவிர சருமத்தைப் பராமரிக்காமல் அதிக நேரம் சூரிய ஒளியின் தாக்கத்தைப் பெறுபவர்க ளும், வேகமாக உடல் எடையை குறைப்பவர்களுக்கும். உடலில் வைட்டமின் சி. ஏ, இ குறைபாடு கொண்டவர்களுக்கும் இளவயதானாலும் சுருக்கம் உண்டாகும்.

தினமும் கண்ணாடி முன்பு நமது முகத்தைப் பார்க்கிறோம். சருமத்தின் ஈரப்பதத்தையும் உண்டா கும் சிறிய மாற்றத்தையும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். முகத்தை அழகாக்கி காட்ட மேக்கப் பில் கவனம் செலுத்தும் பலரும் இயற்கையான முறையில் சருமத்தை முறையாக பராமரிப்பதி ல்லை என்பதே உண்மை. பகல் நேரங்களிலும் விழாக்காலங்களிலும் செயற்கை க்ரீம் பூச்சுகளை பயன்படுத்துகிறாகள். குறிப்பிட்ட நேர இடைவெளியில் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை துடைத்து முக த்தை சுத்தமான நீரில் கழுவி முகத்தை உலரவிட வேண்டும். 

பிறகு சருமத்தின் தன்மைகேற்ப ஆயில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல் கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும். சருமத்தின் ஈரப்பதம் காக்கப்பட்டு சருமம் விரைவில் தளர்வடைவதும் தடுக்கப்படும். தொடர்ந்து இதை செய்து வந்தால் வயது கூடினாலும் உங்கள் முகத்தில் சுருக்கம் விழாது. இளமை யாய் வைத்திருக்கவும் செய்யும்.

உடலில் அதிகப்படியாக நீர்ச்சத்து குறையும் போது டிஹைட்ரேட் பிரச்சனை உண்டாகும். இது உண் டாகும் போது உடல் ஆரோக்கிய இழப்பும் சருமத்தில் சுருக்கங்களும் அதிகரிக்க தொடங்கும். அத னால் தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. தாகம் இல்லையென்று தவிர்க்க கூடாது. சிலர் குளியலுக்கு அதிக சூட்டுள்ள வெந்நீரை பயன்படுத்துவார்கள். எப்போதும் குளிர்ந்த நீரை மட்டுமே பயன் படுத்துவது அழகையும் அதிகரிக்கும். அல்லது மிதமான சூட்டில் பயன்படுத்தலாம். முகத்துக்கு பொலிவை தருவதில் சுத்தமான குளிர்ந்த நீரும் முக்கிய பங்குவகிக்கிறது.

வெள்ளரி, பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ பன்னீர் விட்டு அரைக்கவும். தினமும் ஓய்வு கிடைக்கும் போது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி பிறகு ஃபேஸ் பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் கோடு, சுருக்கம் மறைவதைப் பார்க்கலாம்.

இதனோடு பன்னீர், பால் கலந்து அரைத்தும் பயன்படுத்தலாம். காய்கறிகளில் இருக்கும் சத்துகள் சருமத்தில் இறந்த செல்களை நீக்க உதவும். சரும சுருக்கங்களையும் கட்டுப்படுத்தும். பொதுவாக பழக்கலவைகளை களையிழந்த முகத்துக்கு இருக்கும் பொலிவைக்கூட்டவும், பளிச் தோற்றம் தரவும் பயன்படுத்துவார்கள். வீட்டில் மட்டுமல்லாமல் அழகு நிலையங்களிலும் ஃப்ரூட் ஃபேஷியல் செய்வதுண்டு. இதில் உலர் பருப்புகளும் உண்டு.

களையிழந்த முகத்துக்கு ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழங்களை சேர்த்து கூழ் போல் அரைத்து ஃபேஸ் பேக் போடலாம். இதனால் சருமத்தில் இருக்கும் சுருக்கம் மறைவதோடு மேலும் சுருக்கமா வதும் தடுக்கப்படும். பழக்கலவைகள் ஃபேஸ் பேக்கில் மற்றொரு பயனும் உண்டு. இது முகத்துக்கு கூடுதலாக பொலிவைத் தந்து ஃபேஷியல் எஃபெக்ட் கொடுக்கும்.

அழகை அதிகரிக்க பயன்படுத்தும் இயற்கை சாறுகள் எந்தவிதமான பக்கவிளைவையும் ஏற்படுத் தாது. அதனால் இதை மூலிகை சாறு என்றும் அழைக்கலாம். கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு, பன்னீர், பால், தயிர், க்ரீன் டீ ,முட்டை வெள்ளைக்கரு,அனைத்தையும் சொல்லலாம். இவை அனைத் தையும் சேர்த்து எடுக்க முடியாது. நேரம் கிடைக்கும் போது கிடைக்கும் போதெல்லாம் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைசாறு கலந்து முகத்துக்கு மசாஜ் செய்யுங்கள். இவை வயதான தோற்றத்தை மறைக்க செய்யும். உங்கள் சரு மத்தை இளமையாகக் காட்டும். 

மற்றவற்றைத் தனிதனியாக பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்யும் போது கீழிலிருந்து மேல் நொக்கி செய்வது சுருக்கத்தை அதிகரிக்காது. அழகை அதிகரிக்க செய்யும் பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு, தரமான சந்தனப்பொடி, ரோஜா இதழ்கள் போன்ற ஃபேக்குகளும் சருமத்தை சுருக்கங்களிலிருந்து காப்பாற்றும். 

இந்த பராமரிப்பு வெளிப்பூச்சு வழியாக சருமத்தை சுருக்கங்களிலிருந்து காப்பாற்றும். அதே போன்று சருமத்துக்கு கிடைக்க வேண்டிய ஊட்டசத்துகளை உணவு வழியாக எடுத்துகொள்ள வேண்டும்.இதையெல்லாம் சரியாக கடைப்பிடித்து வந்தால் 60+ வயதிலும் சுருக்கமில்லாமல் யங் காக வலம் வரலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link