கேஎல் ராகுலின் சிறந்த 5 டெஸ்ட் இன்னிங்ஸ்... ஓர் பார்வை?
கேஎல் ராகுல் கடந்த 2014ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இதேபோன்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது வரை இவர் 8 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.
குறிப்பாக, அந்த 8 சதங்களில் 7 வெளிநாட்டில் அடித்துள்ளார். அந்த வகையில், கேஎல் ராகுலின் சிறந்த டாப் 5 ஆட்டங்களை இங்கு நினைவுக்கூர்வோம்.
199 vs இங்கிலாந்து (2016): சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் 199 ரன்களை எடுத்தார்.
158 vs மேற்கு இந்திய தீவுகள் (2016): 2016ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 158 ரன்களை கேஎல் ராகுல் குவித்தார்.
149 vs இங்கிலாந்து (2018): 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் 149 ரன்களை குவித்தார். குறிப்பாக, இந்தியா அப்போது 464 ரன்கள் என்ற இலக்கை துரத்தி, வெற்றியும் கண்டது.
110 vs ஆஸ்திரேலியா (2015): இவர் அறிமுகமான இந்த டெஸ்ட் தொடரில்தான். முரளி விஜய் உடன் ஓப்பனிங் இறங்கிய இவர் ஹசில்வுட், ஸ்டார்க், ரியான் ஹரிஸ், ஷேன் வாட்சன், நாதன் லயான் ஆகியோரை தாக்குபிடித்து 262 பந்துகளுக்கு 110 ரன்களை கேஎல் ராகுல் எடுத்தார்.
108 vs இலங்கை (2015): கொழும்புவில் உள்ள பி சாரா ஓவல் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக ராகுல் 108 குவித்தார்.