ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க வீட்டிலேயே இப்படி பண்ணுங்க போதும்
ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக எடை அதிகமாக அதிகரித்து விடுகின்றது. உடல் பருமன் பல வித உடல் உபாதைகள் ஏற்பட காரணமாகின்றது. உடல் எடை அதிகரித்தால் அதை உடனடியாக குறைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
உடல் பருமன் அதிகமாக உள்ளதா? உங்களுக்கு ஜிம் செல்ல நேரம் இல்லையா? கவலை வேண்டாம். உடல் எடையை குறைக்க வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடுய சில எளிய உடற்பயிற்சிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் எளிதாக உடல் எடைடை குறைக்க முடியும்.
ஜம்பிங் ஜாக் பயிற்சி உடல் முழுவதிலும் உள்ள கொழுப்பை நீக்குகிறது. இதைச் செய்ய, முதலில் நேராக நின்று, இரு கைகளையும் கால்களின் பக்கங்களில் வைக்கவும். அதன் பிறகு கால்களை அகலமாக நீட்டி குதிக்கவும். குதிக்கும் போது இரு கைகளையும் தலைக்கு மேலே எடுத்துச்சென்று கைதட்ட வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு செய்யவும்.
இதை செய்ய, தரையில் உங்கள் வயிறு படும்படி படுத்துக் கொள்ளுங்கள். இப்போது உடல் எடையை உள்ளங்கைகள் மற்றும் கால்விரல்கள் இரண்டிலும் தாங்கிக்கொள்ளவும். உங்கள் கழுத்து, இடுப்பு ஆகியவற்றை நேர்கோட்டில் வைக்கவும். பின்னர் தோள்பட்டைக்கு கீழே முழங்கைகளை தரையில் வைத்து முன்னால் பார்க்கவும். வயிற்று தசைகளை இறுக்கமாக வைத்து இப்படியே 1 நிமிடம் இருக்கவும்.
லெக் ரைஸ் உடற்பயிற்சி என்பது வயிற்றுப் பயிற்சியாகும். இதை செய்ய ஒரு பார் அதாவது கம்பி அல்லது பட்டியை பிடித்து தொங்க வேண்டும். தோள்பட்டை அகலத்திற்கு ஏற்றவாறு பட்டியைப் பிடிக்கவும். அடுத்து வயிற்று தசைகளை இறுக்கி இரண்டு கால்களையும் இணைக்கவும். பின்னர் முழங்கால்களை வளைக்காமல் கால்களை ஒன்றாக உயர்த்தவும். உங்களால் முடிந்தவரை கால்களை மேலே கொண்டு வந்து, மெதுவாக கீழே இறக்கவும். இதை தொடர்ந்து 1 நிமிடம் செய்ய வேண்டும்.
வயிற்றுக்கு மிகவும் உதவும் இந்த உடற்பயிற்சி தொடைகள் மற்றும் இடுப்புகளில் உள்ள கொழுப்பை நீக்குகிறது. இதை செய்ய முதலில் நேராக நிற்கவும். அதன் பிறகு உங்கள் கைகளை முழங்கையிலிருந்து இடுப்பு வரை வைத்து, இரண்டு உள்ளங்கைகளையும் தரையை நோக்கி வைத்துக்கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து வலது முழங்காலை வலது உள்ளங்கை வரை உயர்த்தவும். அதன் பிறகு அதை கீழே எடுத்து, இடது முழங்காலை இடது உள்ளங்கை வரை உயர்த்தவும். இப்படி 1 நிமிடம் தொடர்ந்து செய்யவும்.
ஓடுவது எடை குறைப்பதோடு உடலின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. இது ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாக உள்ளது. ஓட்டப்பயிற்சி கைகள், வயிறு, தொடைகள் மற்றும் இடுப்புகளில் உள்ள கொழுப்பை அகற்ற ஒரு சிறந்த வழியாக உள்ளது. உங்களால் முடிந்த தூரம் மற்றும் நேரம் வரை இதை செய்யலாம். பின்னர் இதன் நேரத்தையும் வரம்பையும் படிப்படியாக அதிகரிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.