Bharat Jodo Yatra: கொட்டும் மழையில் யாத்திரையைத் தொடரும் ராகுல் காந்தி

Tue, 11 Oct 2022-12:24 pm,

காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ராகுல் மதிய உணவுக்காக சற்று நேரம் இடைவெளி விட்ட பிறகு, பயணத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், அனைவரும் மழையில் தொடர்ந்து நடந்து சென்றனர்

கடந்த வாரம் மைசூர் புறநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனமழையில் ராகுல் காந்தி உரையாற்றினார். எங்களை யாராலும் தடுக்க முடியாது, அது மழையாக இருந்தாலும் சரி என்று அவர் கூறினார்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் இந்த பயணத்தை புயலோ குளிரோ நிறுத்த முடியாது என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்

அன்பும் சகோதரத்துவமும் இந்தியாவின் வரலாறு மற்றும் அது அதன் டிஎன்ஏவில் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டார்.

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் விரும்புகிறது. 

நேற்றைய பயணத்தில் ராகுல் காந்தி வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் நீல நிற கால்சட்டை அணிந்து மழையில் நனைந்தபடி சென்றார்

தும்கூர் மாவட்டத்தில் ஈரமான சாலைகளில் ராகுல் காந்தி நடந்து சென்றபோது, ​​ஹூரியூரில் அவர் தங்க இருந்த முகாம் தளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.

ராகுல் காந்தி திங்கள்கிழமை போச்சட்டேயில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். 11 கி.மீ தூரம் நடந்த பிறகு, ஹுல்லியரில் உள்ள கென்கேயில் முதல் ஓய்வு எடுத்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link