வக்ர நிலையில் சனி, ராகு, கேது: 3 ராசிகளுக்கு பொற்காலம்.. திகட்ட திகட்ட மகிழ்ச்சி
சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் ஜூன் 17 அன்று வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். நவம்பர் 4, 2023 வரை சனி கும்ப ராசியில் வக்ர நிலையிலேயே இருப்பார்.
ராகு, கேது வக்ர நிலை: ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையில், அதாவது தலைகீழாக இயங்கும் கிரகங்களாக உள்ளன. இந்த வழியில் இந்த 3 முக்கியமான கிரகங்களான சனி, ராகு மற்றும் கேது ஆகியவை ஒன்றாக தற்போது வக்ர நிலையில் உள்ளன.
சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 4, 2023 வரை சனி கும்ப ராசியில் வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார்.
ராகுவும் கேதுவும் 30 அக்டோபர் 2023 வரை இந்த நிலையில் இருப்பார்கள். இந்த நேரத்தில் ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். அக்டோபர் 30-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடக்கவுள்ளது. ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் அப்போது பெயர்ச்சியாவார்கள்.
ராசிகளில் தாக்கம்: அக்டோபர் 30 வரை சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த 3 கிரகங்களும் சில ராசிகளுக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு நல்ல பலன்களை அளிக்கும்.
மிதுனம்: இந்த நேரத்தில் அலுவலக வேலையில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். பன வரவு அதிகமாகும். தடைபட்டிருந்த காரியங்கள் நடந்துமுடியும். மன அழுத்தம் குறையும். சந்தோஷமாக இருப்பீர்கள். வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
துலா ராசிக்காரர்களுக்கு வக்ர நிலையில் உள்ள சனி, ராகு மற்றும் கேதுவால நல்ல பலன்கள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். உடல், மன வலிகள் விலகும். பண வரவு அதிகமாகும். நிதி நிலை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக ஓர் இடத்தில் சிக்கி இருந்த பணம் இப்போது கிடைக்கும்.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனி, ராகு, கேதுவின் வக்ர நிலையால் அக்டோபர் 30 ஆம் தேதி வரை மிக நல்ல நேரமாக இருக்கும். உங்களை வாட்டி வதைத்த பிரச்சனைகள் மற்றும் அழுத்தங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த ஊதிய உயர்வு இப்போது கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.