சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசம்: மேஷம் முதல் மீனம் வரை..முழு ராசிபலன் இதோ
மேஷம்: சனி பகவான் மேஷ ராசிக்காரர்களின் வேலையில் சிரமங்களை அதிகரிக்கலாம். எனவே, நன்கு யோசித்து முடிவு எடுங்கள். இல்லையெனில் நஷ்டம் ஏற்படுவது உறுதி. சனியால் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உங்கள் சக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் நலன்களை கவனித்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்: சனியின் வக்ர பெயர்ச்சி சில புதிய அனுபவங்களைத் தரும். வெளியூர் பயணமும் மேற்கொள்ளலாம். மறுபுறம், மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், குடியுரிமைக்காக முயற்சி செய்தால், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இது சரியான நேரமாக இருக்கும்.
மிதுனம்: சனியின் சிறப்பு பார்வை இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலை தடைபடலாம். திருமணம் முதலியவற்றில் தாமதம் ஏற்படலாம். ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். முயற்சிகளை குறைக்காதீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமாக பயணம் செய்ய நேரிடலாம்.
கடகம்: ஏற்கனவே உங்கள் ராசியில் சனி தசை உள்ளது. ஆகையால் நீங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் பெரிய இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகி வருவதால், புதிய கடன் வாங்குவதற்கு முன்னர் பழைய கடனை அடைப்பது நல்லது.
சிம்மம்: சனியின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சில பிரச்சனைகளையும் சில சமயங்களில் நல்ல பலன்களையும் அளிக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவுமுறைகளில் பதட்டம் இருக்கும். பண வகையில் லாபம் கூடும். தடைபட்ட வேலையை மீண்டும் தொடங்கலாம்.
கன்னி: சனி வக்ர பெயர்ச்சியால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். பழைய நோய்கள் மீண்டும் தோன்றலாம். மிகவும் யோசித்து பின்னர் பணத்தை முதலீடு செய்யுங்கள். பங்குச் சந்தையில் லாபம் வரக்கூடும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம், சில புதிய வேலைகள் தொடங்கலாம்.
துலாம்: சனிக்கு பிடித்தமான மற்றும் உயர்ந்த ராசி உங்களுடையது. ஆகையால் உங்களுக்கும் உங்களுடன் இருப்பவர்களுக்கும் மிக நல்ல நேரமாக இது இருக்கும். வெளிநாட்டில் இருந்து லாபகரமான செய்தி வரும் சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் இலக்கை அடைவதில் வெற்றி பெறுவார்கள். கல்வித் துறையில் சிறப்பான வெற்றியைப் பெறலாம்.
விருச்சிகம்: சனியின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலன்களைத் தருகிறது. இந்த காலத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். சளி மற்றும் காய்ச்சல் புகார்கள் இருக்கலாம்.
தனுசு: சில விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் முக்கியமான வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துடன் மதப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
மகரம்: பணம் சம்பந்தமான விஷயங்களில் இருந்த தடைகள் நீங்கும். இந்த நேரத்தில், பேச்சு கடுமையாக இருக்கும், அதனால் நீங்கள் பிரச்சனையில் சிக்கலாம். மற்றவர்களுக்கு தீமை செய்வதை தவிர்க்கவும். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
கும்பம்: சனியின் வக்ர பெயர்ச்சியால் அதிகபட்ச பலன் கும்ப ராசிக்காரர்களுக்குதான் தெரியும். கும்ப ராசிக்காரர்கள் போராட வேண்டியிருக்கும். சில சமயங்களில் வெற்றிக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
மீனம்: சனியின் சஞ்சாரம் சில சமயங்களில் லாபத்தையும், சில சமயங்களில் நஷ்டத்தையும் தரும். வீடு, புதிய வேலைகளுக்காக பணம் செலவழிப்பீர்கள். பயணங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தலைமுடி உதிர்வு பிரச்சனையால் சிரமப்படுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.