இன்று முதல் ராஜவாழ்க்கை: வக்ரமடையும் குருவால் இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்
கிரக மாற்றங்கள்: இந்த செப்டம்பர் மாதம் பல கிரகங்களில் மாற்றம் ஏற்படும். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு பகவான்: குரு பகவான் கல்வி, செல்வம், செழிப்பு, பண வரவு, லாபம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். குருவின் அனைத்து மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு வக்ர பெயர்ச்சி: செப்டம்பர் 4 ஆம் தேதி, அதாவது இன்று குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பகவான் டிசம்பர் 31 வரை வக்ர நிலையில் இருந்து அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார்.
ராசிகளில் தாக்கம்: குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், சிலருக்கு பிரச்சனைகள் வரக்கூடும். குருவின் வக்ர பெயர்ச்சியில் 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: குரு வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான காலம் தொடங்கும். இந்த நேரத்தில் நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பொருளாதார ரீதியாக அதிக லாபம் அடைவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றி காலம் தொடங்கும். நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடந்து முடியும். நண்பர்களுடன் நன்றாக நேரத்தை செலவிட முடியும். நிதி ஆதாயம் கிடைக்கும். நிதி வருவாய் மிகவும் நன்றாக இருக்கும். பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் கிடைக்கும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு வெற்றி காலம் தொடங்கும். இந்த நேரத்தில் புதிய பணிகளை தொடங்கலாம். இந்த காலத்தில் மனதின் ஆசை நிறைவேறும். நீண்ட நாட்களாக வாட்டி வட்தைத்த நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசி: குருவின் வக்ர பெயர்ச்சியும் அதன் பிறகு நடக்கவுள்ள வக்ர இயக்கமும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். திருமணமானவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதே சமயம் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
துலாம்: வக்ர நிலையில் குரு பயணிப்பது துலா ராசிக்காரர்களுக்கு சாதமகாக இருக்கும். இவர்களது வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும். இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் தீரும். திருமணத்திற்கு ஏற்ற துணையை தேடும் துலா ராசிக்காரர்களின் தேடல் முடிவடையும். நல்ல வாழ்க்கைத் துணையை பெறுவீர்கள். ஜோதிடத்தின்படி, நீதித்துறை விஷயங்களிலும் வெற்றி வாய்ப்புகள் உள்ளன. பலம் கூடும் மற்றும் பல துறைகளில் வெற்றி பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.