சுக்கிரன் மாற்றத்தால் உருவான திரிகோண ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்
)
இந்த திரிகோண ராஜயோகம் அனைத்து 12 ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், பொருள் மகிழ்ச்சி, அன்பு, அழகு, ஈர்ப்பு ஆகியவற்றின் கிரகமாக இருப்பதால், இது மக்களின் வாழ்க்கையின் இந்த பகுதிகளை பாதிக்கும். அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்பட்டாலும், சுக்கிரனின் மாற்றத்தால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
)
சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் திரிகோண ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளித் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் ஊதியம் கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் பெரிய லாபம் பெறலாம். வீடு, மனை, வாகனம், மதிப்புமிக்க பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் யோகம் உண்டாகலாம்.
)
சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான சுப பலன்களைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம். பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான காலம் இது.
சுக்கிரனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பயணம் செல்வீர்கள், சுப பலன்களைப் பெறுவீர்கள். முதலீடு செய்ய இது நல்ல நேரம். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.