குரு பெயர்ச்சி பலன்கள் 2024: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், பொற்காலம்
செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றின் காரணியான குரு பெயர்ச்சியானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். இதனால் இந்த ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு மேஷ ராசியில் விலகி ரிஷப ராசிக்கு (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார்.
குரு பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான பலன் கிடைக்கும். ஆனால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபகரமான பலன் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, பண வரவு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இந்நிலையில் குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசிக்கு குரு பெயர்ச்சி நிகழப் போகிறது. எனவே இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புரமோஷன் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். வீட்டில் சுப நிகழ்ச்சியால் நடக்கும். சுப செலவுகள் அதிகரிக்கலாம். புதிய தொழிலை தொடங்க மே மாதம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் கழிப்பீர்கள்.
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் அற்புத யோகம் உண்டாகும். சாதகமான பலன் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்தலாம். வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நிறைய நன்மைகள் கிடைக்கும். திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. பதவி முன்னேற்றம் ஏற்படலாம். தடைபட்ட வேலைகள் நிறைவடையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை பெறலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.