CSK: சிஎஸ்கே வெளியேவிட்ட இந்த 3 வீரர்களுக்கு பெரிய டிமாண்ட்... ஏலத்தில் திருப்பி எடுப்பது கஷ்டம்!
ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) வரும் நவ. 24, 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கே 5 வீரர்களை தக்கவைத்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கும், பதிரானாவை ரூ.13 கோடிக்கும், சிவம் தூபேவை ரூ.12 கோடிக்கும், தோனியை ரூ.4 கோடிக்கும் சிஎஸ்கே (CSK Retentions 2025) தக்கவைத்துள்ளது.
இன்னும் கையில் ஒரு RTM கார்டுடனும், ரூ.55 கோடி தொகையுடனும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை சிஎஸ்கே அணி (CSK) எதிர்கொள்கிறது. இந்த தொகைக்கு இன்னும் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 20 வீரர்களை சிஎஸ்கே எடுக்க வேண்டும்.
மீதம் இருக்கும் இந்த ஒரு RTM மூலம் ரச்சின் ரவீந்திராவை தூக்கவே சிஎஸ்கே கடுமையாக போட்டியிடும். ஏலத்தில் விடுவித்த மற்ற வீரர்களை பிற அணிகளுடன் போட்டியிட்டுதான் தூக்க வேண்டும்.
அந்த வகையில், சிஎஸ்கே (Chennai Super Kings) ஐபிஎல் மெகா ஏலத்திற்கு விடுவித்துள்ள இந்த மூன்று வீரர்களுக்கு கடுமையான டிமாண்ட் இருக்கும் எனலாம். அதனால் இந்த மூன்று வீரர்களையும் மீண்டும் எடுப்பது கடினமான ஒன்றாகும்.
துஷார் தேஷ்பாண்டே: புதிய பந்திலும், டெத் ஓவரிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் கிடைப்பது கஷ்டம். துஷார் தேஷ்பாண்டே (Tushar Deshpande) சிஎஸ்கேவால் செதுக்கப்பட்டவர் ஆவார். இருப்பினும் இவருக்கு இந்த மெகா ஏலத்தில் கடுமையான போட்டி இருக்கும். சிஎஸ்கே இவரை எடுப்பது மிகுந்த கஷ்டமாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் கூட இவரை அதிக தொகைக்கு எடுக்க போட்டியிடும்.
டேரில் மிட்செல்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பினாலும் டேரில் மிட்செல் (Daryl Mitchell) போன்ற மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் வீரர் கிடைப்பது அரிது. எனவே இவரை பெரிய தொகையில் எடுக்க அனைத்து அணிகளும் முந்தும்.
டெவான் கான்வே: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் போன்ற மூத்த சுழற்பந்துவீச்சாளரையே புரட்டி எடுத்து இடதுகை பேட்டர் டெவான் கான்வே (Devon Conway). இவரை சிஎஸ்கே கண்டிப்பாக பெரிய தொகை கொடுத்தாவது எடுக்க நினைக்கும். ஆனால் இவரை எடுப்பது சிஎஸ்கேவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. இவர்கள் மூவரை போலவே மிட்செல் சான்ட்ரை (Mitchell Santner) எடுக்கவும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.