நிலை மாறும் சூரியன்: இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்... நினைத்தது நடக்கும்

Wed, 13 Sep 2023-12:49 pm,

சூரிய பகவான்: சூரிய பகவான்: சூரிய பகவான் அனைத்து கிரகங்களின் அரசனாக கருதப்படுகிறார். மனிதர்களின் ஆன்மா, சுய சிந்தனை, வெற்றி ஆகியவற்றின் காரணியாக அவர் கருதப்படுகிறார்.

சூரிய பெயர்ச்சி: சூரிய பெயர்ச்சி: செப்டம்பர் 14 அன்று, சூரியன் 27 நட்சத்திரங்களில் ஒன்றான உத்திர நட்சத்திரத்திற்கு மாறப் போகிறார். அதன் பிறகு அவர் செப்டம்பர் 17 அன்று கன்னி ராசிக்குள் நுழைவார்.

புதாதித்ய யோகம்: இது தவிர அக்டோபரில் புதனும் பெயர்ச்சி ஆவதால் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை உண்டாகும். இந்த சேர்க்கை புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கும், இது மிகவும் சுபமான ராஜயோகமாக கருதப்படுகின்றது. ஒருவருக்கு புதாதித்ய யோகம் உருவாகும் போது செல்வம், சுகம், புகழ், மரியாதை ஆகியவை கிடைக்கும். 

ராசிகளில் தாக்கம்: சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் உயர் நிலையை அடைவார்கள். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

மேஷம்: சூரிய பகவானின் சஞ்சாரம் மற்றும் புத்தாதித்ய ராஜயோகம் ஆகியவை மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். பிள்ளைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். அதே நேரத்தில், உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் .குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம். 

மிதுனம்: சூரியனின் ராசி மாற்றத்தால் வேலையில் வெற்றி கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். சில பெரிய பொறுப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன, புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். முதலீட்டிற்கு சாதகமான காலமாக இது இருக்கும். நல்ல வருமானம் பெறுவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன. பொருளாதாரப் பலன்களும் கூடும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

 

கடகம்: சூரிய பகவானின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த காலகட்டத்தில் வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் நல்ல காலமாக இது இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். பொருளாதாரம் மற்றும் தொழில் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

தனுசு: சூரியனின் ராசி மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். செல்வம் மற்றும் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் தொழில் ரீதியாக திடீர் ஆதாயங்களைப் பெறலாம். பதவி, கௌரவம் உயரும்.  வருமானம் பெருகவும் புதிய ஆதாரங்கள் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. நிதி விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

கன்னி: புதன் மற்றும் சூரியன் இணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு பலன் தரும். நீங்கள் எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மார்கெட்டிங், மீடியா, கம்யூனிகேஷன், வங்கி ஆகிய துறைகளுடன் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் ஆதாயமடையலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link