தீபாவளி 2024: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... சனி பகவானின் விசேஷ அருள் கிட்டும்

Wed, 23 Oct 2024-2:20 pm,

அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். இவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. அனைத்து கிரகங்ளும் மாற்றங்கள் கண்டு பெயர்ச்சி அடைந்தாலும், சனி பெயர்ச்சிக்கும் குரு பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு தீபாவளிக்கான திதி அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 என இரு நாட்களிலும் இருக்கின்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு,  தீபாவளி பண்டிகை அமையும் இரண்டு நாட்களிலும் நீதியின் கடவுளான சனி பகவான் தனது அசல் திரிகோண ராசியான கும்பத்தில் சஞ்சரித்திருப்பார். இது மிகவும் சக்திவாய்ந்த 'ஷஷ ராஜயோகத்தை' உருவாக்கும். 

தீபாவளியில் உருவாகும் ஷஷ ராஜயோகம் மற்றும் லஷ்மி நாராயண யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் தீபாவளி முதல் பொற்காலம் பிறக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: சஷ மற்றும் லக்ஷ்மி நாராயண யோகத்தின் பலன் காரணமாக, மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் மூலம் அதிக லாபம் காணலாம். பழைய கடன்களில் இருந்து விடுபடலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். கோபம் குறையும், மனம் அமைதியாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.

சிம்மம்: தீபாவளியில் உருவாகும் யோகங்களால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். நல்ல போனஸ் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இதன் காரணமாக வியாபாரம் விரிவடையும். உங்கள் ஆக்கப்பூர்வமான பணி பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் ஷஷ ராஜயோகம் மகிழ்ச்சியை அள்ளித்தரும். நிதி நெருக்கடி தீரும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விரிவடைவதால் லாபமும் அதிகரிக்கும். கல்வி மற்றும் எழுத்துத் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் தொல்லையிலிருந்து விடுபடுவதால் மன அமைதி கிடைக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் தொழில் ரீதியாக வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜயோகம் மற்றும் லக்ஷ்மி நாராயண யோகத்தின் பலன் காரணமாக வருமானம் அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வணிகம் விரிவடையும். மாணவர்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் வேலையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்க இதுவே சரியான நேரம்.  திடீர் நிதி ஆதாயம் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும். திருமண வாழ்வில் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். 

சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளாறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். சனிக்கிழமைகளில் பிள்ளையார், முருகர், சிவன், துர்கை, சனீஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு உணவளிப்பது சனிபகவானை மகிழ்விக்கும்.  

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link