சனி வக்ர பெயர்ச்சி் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: பொற்காலம் பிறக்கும்
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
ஜோதிட கணக்கீடுகளின் படி, 2024 ஆம் ஆண்டில், சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு, 30 ஆம் தேதி அதிகாலை கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதன் பிறகு அவர் நவம்பர் 15, 2024 அன்று வக்ர நிவர்த்தி அடைவார். சனி வக்ர பெயர்ச்சி ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அட்டகாசமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் இது ஒரு பொற்காலமாக இருக்கும். இவர்கள் பல வித நன்மைகளை அடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிககளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: சனி வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது சமூகத்தில் மரியாதை மற்றும் மதிப்பை அதிகரிக்கும். அன்னைக்கு பழைய நோயிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் கிடைக்கும். குழந்தை தேர்வில் வெற்றி பெறலாம். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
கடகம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் மேலதிகாரிகளால் சில பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம். இதை முழு அர்ப்பணிப்புடன் செய்தால், விரைவில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழில் காரணமாக, தொழிலதிபர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறலாம். பல இடங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலக பணிகளில் ஏற்றம் ஏற்படும்.
துலாம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைத்து வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். வியாபாரிகளின் வருமானத்தில் திடீர் உயர்வு கூடும். பெற்றோர்களின் ஆசியுடன் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பள்ளி அல்லது கல்லூரியில் விருது பெறலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழில் ரீதியாக வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்துடன் நீண்ட பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில், நம்பிக்கை மற்றும் அன்பு இரண்டும் அதிகரிக்கும். சில பெரிய இடங்களில் பணத்தை முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
மீனம்: அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடனான உறவுகள் பலப்படும். இதன் காரணமாக பணிச்சூழல் நன்றாக இருக்கும். இது தவிர, பணியிடத்திலும் உங்கள் பணி பாராட்டப்படலாம். இந்த நேரத்தில் பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது நன்மை தரும். எதிர்காலத்தில் நல்ல லாபம் ஈட்ட அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இப்போது முதலீடுகளை செய்யலாம்.
சனி பகவானை மகிழ்விக்க சனி சாலிசா, ஹனுமான் சாலிசா ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கும், நலிந்தோருக்கும் உதவும் நபர்களையும் சனி பகவான் கைவிடுவதில்லை.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.