இந்த IPL-ல் மிரட்டும் ஹீரோக்கள்... ஆனால் டி20 உலகக் கோப்பையில் இடமில்லை!
சாய் சுதர்சன்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் 418 ரன்களை அடித்துள்ளார், இவர்.
ஜேக் பிரேசர் மெக்கர்க்: டெல்லி அணிக்காக கடந்த 6 போட்டிகளில் களமிறங்கி 259 ரன்களை குவித்திருக்கிறார், இந்த இளம் ஆஸ்திரேலிய சிங்கம். ஆனால் இவருக்கு ஆஸ்திரேலிய டி20 உலகக் கோப்பை அணியில் இடமில்லை.
திலக் வர்மா: மும்பை அணிக்காக அதிக ரன்களை அடித்தவர் இவர்தான். 10 போட்டிகளில் 343 ரன்களை இவர் அடித்துள்ளார்.
சுப்மான் கில்: குஜராத் அணிக்காக 10 போட்டிகளில் 320 ரன்களை இவர் அடித்துள்ளார். இருப்பினும் இவர் டி20 உலகக் கோப்பையின் ஸ்குவாடில் ரிசர்வ் வீரராக உள்ளார்.
கேஎல் ராகுல்: லக்னோ அணி கேப்டனான இவர் 10 போட்டிகளில் 406 ரன்களை குவித்துள்ளார். இருப்பினும் இவருக்கு டி20 உலகக் கோப்பையில் இடமில்லை.
ரின்கு சிங்: இந்த சீசனில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் கூட 123 ரன்களை 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். பினிஷரான இவரையும் ரிசர்வ் வீரராகவே இந்தியா எடுத்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், நடப்பு தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இவருக்கும் டி20இல் இடமில்லை. 10 போட்டிகளில் 503 ரன்களை குவித்துள்ளார்.