2025ஆம் ஆண்டில்... இந்த 5 ராசிக்காரர்கள் தான் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் - நல்ல காலம் வருது!

Mon, 21 Oct 2024-4:19 pm,

இன்னும் 10 நாள்களில் தீபாவளி பண்டிகை (Diwali 2024) வர இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ஆங்கிலப் புத்தாண்டு (New Year 2025) பிறக்க உள்ளது. அடுத்த 2025ஆம் ஆண்டில் சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவை உள்ளன. 

 

இந்த கிரக பெயர்ச்சிகள் 12 ராசிக்காரர்களின் (Zodiac Signs) வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், அடுத்தாண்டு இந்த 5 ராசிக்காரர்களுக்குதான் அதிர்ஷ்டம் அதிகம் எனலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

 

ரிஷபம்: 2025ஆம் ஆண்டு என்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல விதங்களில் அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. உங்களுக்கு பிடித்த வேலை, பதவி அனைத்தும் கிடைக்கும், பணி வாழ்வு சிறக்கும். இதனால் பணமும் கொட்டும், சமூகத்தில் மதிப்பும் உயரும். வியாபாரம் செய்வர்களுக்கும் இதேதான் பணம் குவியும். திருமணமானவர்களுக்கு மணவாழ்வு சிறக்கும், நீண்டநாளாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு அனைத்தும் கைக்கூடி வரும்.

 

சிம்மம்: 2025ஆம் ஆண்டு உங்களுக்கு பல பிரச்னைகளில் இருந்து நிவாரணத்தை அளிக்கும். பணியிடத்தில் நீடித்து வந்த பிரச்னைகள் தீரும், வேலையாக நிலையாக அமையும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல காலம் காத்திருக்கிறது, நீங்கள் வெளிநாடுகள் வரை உங்கள் வியாபாரத்தை கொண்டுபோவீர்கள். பெரிய பெரிய ஆர்டர்கள் வரலாம், நீங்களும் வெளிநாடு பயணிக்கலாம். ஆனால் குடும்ப வாழ்வில் பிரச்னைகள் வரலாம். அனைத்தையும் பொறுத்துபோகும் மனப்பான்மை இருந்தால் பிரச்னை இருக்காது.  

 

கன்னி: 2025ஆம் ஆண்டில் நீங்கள் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் அதிர்ஷ்டம் கொட்டும். நீங்கள் எந்த காரியத்தில் கைவச்சாலும் மிஸ் ஆகாது, பலன்கள் குவியும். புது புது வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அரசு வேலைக்கு நீண்ட காலமாக தயாராகி வருபவர்களுக்கு கனவு நிறைவேறும் காலம் அது. பொருளாதாரா ரீதியாகவும் நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள். 

 

துலாம்: 2025ஆம் ஆண்டில் உங்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். பணிவாழ்க்கையில் நீங்கள் சாதிக்க விரும்பிய விஷயங்கள் அனைத்தும் இந்தாண்டு கைக்கூடி வரும். பாராட்டு மழை கொட்டும், உயர் பதவிகள் தேடி வரும், வருவாயும் மலைப்போல் உயரும், பொருளாதாரா ரீதியில் பலமடைவீர்கள். வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பும் நபரே உங்களுக்கு வாழ்க்கை துணையாக அமைவார்கள். 

 

விருச்சிகம்: 2025ஆம் ஆண்டு உங்களுக்கும் சிறப்பானதாக அமையலாம். நீண்ட காலங்களாக நீங்கள் சந்தித்து வரும் சோதனைகள் இந்தாண்டில் உங்களைவிட்டு ஓடிவிடும். குறைந்தபட்சம் அதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணியில் நல்லது நடக்கும். வரும் அதிகரிக்கும், கடனில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பை அதிகமாக்குவீர்கள். நீங்கள் வியாபாரத்தில் போட்ட முதலீடுகள் அனைத்தும் நல்ல லாபத்தை பெறும். உங்களுக்கும் வாழ்க்கை துணைக்கும் இடையிலான உறவு இந்த காலகட்டத்தில் இன்னும் வலுபெறும். 

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொது நம்பிக்கை மற்றும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link