Chennai Rain: எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்? எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது?

Tue, 15 Oct 2024-12:52 pm,

எந்தெந்த சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது?: திருமங்கலம் மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி செல்லும் வழியில்; நெற்குன்றம் சந்திப்பு மற்றும் ரயில் நகர் சந்திப்பு இடையே உள்ள பி.ஹெச். சாலையில்; மேட்டுக்குளம் தீயணைப்பு நிலையம் அருகே; சேத்துப்பட்டு பெரியார் பாதை 100 அடி சாலை முழுவதும்; சென்னை அண்ணா சாலையின் அருகே ராயப்பேட்டை பட்டுல்லாஸ் சாலை; காந்தி மண்டபம் சாலை குழந்தைகள் பூங்கா அருகில்; இளைய முதலி தெரு முதல் வண்ணாரப்பேட்டை காமராஜர் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. (கோப்பு புகைப்படம்)

 

 

 

 

 

மூட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்: பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை ஆகிய ஐந்து சுரங்கப்பாதைகளும் மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள். (கோப்பு புகைப்படம்)

 

 

மெதுவாக செல்லும் போக்குவரத்துகள்: தானா தெரு, வெலிங்டன் முதல் டேம்ஸ் ரோடு, சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் சந்திப்பு, டேங்க் பங்க் ரோடு, ஸ்டெர்லிங் சாலை, பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி, நீலாங்கரை சந்திப்பு முதல் நீலாங்கரை PS, அண்ணா சாலை முதல் எம்ஜிஆர் சாலை வரை, பிராட்வே சந்திப்பு, பிரகாசம் சாலை, ஹைத் மஹால், மண்ணடி மெட்ரோ, Blue Star சந்திப்பு, சிந்தாமணி, ஐயப்பன் கோயில், நெற்குன்றம் ரயில் நகர் நோக்கி, Hp பெட்ரோல் பங்க் 200mt சாலைக்கு அருகில். 17. மேட்டுக்குளம் முதல் தீயணைப்பு நிலையம் வரை, பட்டுலாஸ் சாலை, ஹப்லிஸ் ஹோட்டல், பால் வெல்ஸ் சாலை 

 

மாற்றுப்பாதை: ஐஸ் ஹவுஸில் இருந்து GRH சந்திப்புக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேனி ஹை ரோட்டை நோக்கி வலதுபுறம் திரும்பி, ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்கள் திசைதிருப்பப்படாமல் தங்கள் வழியில் செல்லலாம். GRH சந்திப்பில் இருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு ஏதும் மாற்றம் இல்லை. இவை மட்டும்தான் மழைப்பொழிவு காரணமாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.  (கோப்பு புகைப்படம்)

 

மழை காரணமாக இதுவரை போக்குவரத்து மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.  (கோப்பு புகைப்படம்)

சென்னையில் இதுவரை சரிந்த மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. மொத்தம் கனமழையால் சாலையில் சரிந்த 7 மரங்களை அகற்றி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  (கோப்பு புகைப்படம்)

 

சென்னையில் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென ரெட் அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றே அதிகனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.  (கோப்பு புகைப்படம்)

 

சென்னையில் இன்று மட்டுமின்றி நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  (கோப்பு புகைப்படம்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link