விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்!

Mon, 06 Jan 2025-11:40 am,

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் நற்செய்தியால் மக்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க விட்டிருக்கிறது. அந்த நற்செய்தி என்னவென்றால், பெட்ரோல் விலை ரூ.20 குறையும் என அறிவிக்கப்பட்டு இருப்பது தான். பெட்ரோல் விலை குறைப்பு குறித்த தகவல்களை பார்ப்போம்.

பெட்ரோல் விலை ரூ.20 குறையும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தது குடிமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

எப்போதிலிருந்து இந்த பெட்ரோல் விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் கிடைக்கும். இது கணிசமான விலை குறைவதற்கு வழிவகுக்கும். இந்த பெட்ரோல் விரைவில் பெட்ரோல் பம்புகளில் கிடைக்கும். இதன் விலை 20 ரூபாய் குறைவாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

டொயோட்டா ஏற்கனவே எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எரிபொருள் விலை லிட்டருக்கு வெறும் 25 ரூபாய். மேலும் எத்தனால் இயங்கும் வாகனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஃப்ளெக்ஸ் எரிபொருள் ஒரு மாற்று எரிபொருள். இது பெட்ரோலுடன் எத்தனால் அல்லது மெத்தனால் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோல் செலவை பெருமளவு குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உ'ள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை கணிசமாகக் குறைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link