Old Pension Scheme சூப்பர் அப்டேட்: முக்கிய கூட்டம்.... விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி
நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான கோரிக்கை வலுத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மீண்டும் ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் அதாவது என்.பி.எஸ்-ல் மாற்றங்களைச் செய்ய நிதிச் செயலர் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜூன் 9 ஆம் தேதி, தேசிய பணியாளர்கள் கவுன்சில் அலுவலக நிர்வாகிகளுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பழைய ஓய்வூதியத்தை தவிர, வேறு எதற்கும் ஊழியர்கள் அமைப்பு ஒப்புதல் அளிக்காது என, மத்திய அரசு ஊழியர் அமைப்பின் பிரதிநிதி, குழுவிடம் தெளிவாகக் கூறினார். உத்திரவாதமில்லாத என்.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே திரும்பப் பெறுவதுதான் இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி.
இந்தநிலையில், ஊழியர்கள் தரப்பில் வழங்கப்பட்ட குறிப்பாணையின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என குழுவின் தலைவர் உறுதியளித்தார். சில நாட்களுக்கு முன்னர் என்பிஎஸ் -ஐ திருத்துவதற்காக அரசாங்கத்தால் குழு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு, கூட்டத்தில், பணியாளர்கள் அமைப்பின் பிரதிநிதி, குழுவின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அனைத்து நிலையிலும் NPS ஒழிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவாத வருமானம் கொண்ட ஓபிஎஸ் -ஐ மீட்டெடுக்க வேண்டும் என்றும் குழு கூறுகிறது.
என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்: என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம். என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.