பிக்பாஸூக்கு பிறகு ’No loss.. ஒன்லி வரவு’ தான்..! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக உள்ளே சென்றவர் லாஸ்லியா. இலங்கை தமிழர் என்பதால் மற்ற போட்டியாளர்களை விட தமிழக ரசிகர்களுக்கு இவர் மீது பிரியம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. இதனால், இவருக்கு ஆதரவாக இணையத்தில் ஆர்மியெல்லாம் துவங்கி, பட்டையை கிளப்பினார்கள் ரசிகர்கள்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே கவினுடன் காதலில் விழ, இவர்களின் ரொமான்ஸ் பிக்பாஸ் வீட்டிக்கு வெளியே ஹாட் டாப்பிக்காக ஓடியது.
நிகழ்ச்சி முடிந்த பிறகும்கூட இருவரும் காதலை தொடர்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தான் ஏமாற்றம்
பிக்பாஸூக்கு பிறகு அவர்கள் இருவரும் தங்களின் சினிமா வேலையை ஜோராக தொடங்கினர். லாஸ்லியா பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேநேரத்தில் சமூகவலைதளங்களில் சில லேட்டஸ்ட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டிற்குள் பார்த்த லாஸ்லியாவா இவர்? என வாய்மேல் விரல் வைக்கின்றனர்.