பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஜோவிகா! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு?
பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் அந்த வீட்டில் 60 நாட்களுக்கும் மேல் இருந்துள்ளார். இவர் மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகையும் டிஜிட்டல் பிரபலமாகவும் விளங்கும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளராக நுழைந்தார்.
ஜோவிகா, போட்டியின் ஆரம்ப நாட்களில் சிங்கிளாக தனித்து நின்று விளையாடினார். இவர், விசித்ராவிடம் படிப்பு குறித்து பேசிய எபிசோட் பெரும் வைரலானது.
பிரதீப் குமாரின் ரெட் கார்ட் விவகாரத்தில் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்களின் லிஸ்டில் ஜோவிகாவும் இணைந்துள்ளார்.
ஜோவிகா, கடந்த சில நாட்களாக சிலருடன் சேர்ந்து விளையாடுவதாக ரசிகர்களிடையே கருத்துகள் பரவியது. இதையடுத்து, ஆரம்பத்தில் இருந்த மக்களின் ஆதரவு அவருக்கு அப்படியே படிப்படியாக குறைந்தது.
ஜோவிகா கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸில் இருக்கிறார். ஒரு நாளைக்கு இவருக்கு 18,000 வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜோவிகாவிற்கு 10 லட்சத்திற்கும் மேலாக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.