பிக்பாஸ் ஷிவானியா இது? அழகான முகத்துக்கு என்ன ஆச்சு? வைரலாகும் போட்டோஸ்!

Wed, 02 Oct 2024-12:52 pm,

2016ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவுதொடர் மூலம் பிரலமானவர், ஷிவானி. இதையடுத்து, சில தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலமான சின்னத்திரை நடிகை இவர். 

பகல் நிலவு தொடரி அடுத்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்த இவர் 2020ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார். 

இந்த பிக்பாஸ் 4வது சீசனில், இவருடன் சக போட்டியாளராக இருந்தவர் பாலாஜி. இருவரும் அந்த நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்ததை அடுத்து, இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தே 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அப்படிப்பட்ட காதல் ஒன்று இருந்ததையே ரசிகர்கள் மறந்து விட்டனர். 

ஷிவானி பிரபலமாக முக்கிய காரணமாக இருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான் என்றாலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கமும் இன்னொரு காரணமாக அமைந்தது. இதில் இவர் கடந்த சில ஆண்டுகளாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஷிவானிக்கு இப்போது இன்ஸ்டா தளத்தில் 5 மில்லியன் வரை ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். இவர் எந்த பதிவை வெளியிட்டாலும் அது லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை தாண்டி வருகிறது. 

ஷிவானி, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு 3வது மனைவியாக நடித்திருந்தார். அது மட்டுமல்ல, வீட்ல விஷேஷம் படத்திலும் சிறிய கதாப்பாத்திரத்தில் வந்தார். 

ஷிவானி, சமீப காலமாக வெளியிடும் புகைப்படங்களில் கொஞ்சம் ‘டல்’-ஆக தெரிவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பழைய போட்டோக்களில் ஷார்ப்-ஆகவும் நேராகவும் இருந்த அவரது மூக்கும், தற்போது சைஸ் மாறியிருக்கிறது. அது மட்டுமல்ல, அவரது உதடும் கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது. 

ஷிவானியின் இந்த புதிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இவர் மூக்கு மற்றும் உதட்டுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கலாம் என கூறி வருகின்றனர். இதனால், “அழகான முகத்தை இப்படி கெடுத்துக்கொண்டாரே..” என பலர் புலம்பியபடி இருக்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link