இந்த பிரபல அரசியல்வாதியின் மகன் தான் பிக்பாஸ் ராணவ்வா? வைரலாகும் புகைப்படங்கள்!
பிக்பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக இருக்கும் ராணவ்விற்கு சமீபத்தில் கையில் அடிபட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ராணவ்விற்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணாவின் அப்பா பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. ராணவ்வின் அப்பா காங்கிரஸ் கட்சியில் முக்கியமான ஒருவராக இருந்து வருகிறார். அவரது பெயர் கராத்தே சந்துரு.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாராக உள்ளே வந்தார் ராணவ். ரயான், மஞ்சூரி, ரியா, வர்ஷினி, சிவகுமார் ஆகியோருடன் ராணவ் உள்ளே வந்தார்.
தற்போது வர்ஷினி, சிவகுமார், ரியா ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில் ராணவ் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ராணவ் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.
ராணவ் அப்பா காங்கிரஸ் கட்சியில் வடசென்னை மாவட்ட செயலாளராக சில ஆண்டுகள் இருந்துள்ளார். ராணவ்விற்கு ஒரு தம்பியும், ஒரு சகோதரியும் உள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த இறைவி மற்றும் விஜய் நடித்த மாஸ்டர் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.