டென்னிஸ் வரலாற்றில் இந்தியரின் மகத்தான சாதனை... 43 வயதிலும் மிரட்டும் போபண்ணா!
Rohan Bopanna World No 1 Record: இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ரோஹன் போபண்ணா மற்றும் அவரது போட்டி இணையரான ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ எப்டன் ஆகியோர் கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவின் மாக்ஸிமோ கோன்ஸாலெஸ் மற்றும் ஆண்ட்ரேஸ் மோல்டினி இணையரை வீழ்த்தியது.
கால் இறுதிச் சுற்று சுமார் ஒரு மணிநேரம் 46 நிமிடம் வரை நீடித்த நிலையில், 6-4, 7-6(5) என்ற நேர் செட்டில் போபண்ணா - மாத்யூ ஜோடி வெற்றி பெற்றது.
இதுவரை 17 முறை ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடி உள்ள ரோஹன் போபண்ணா முதல் முறையாக அரையிறுதிக்கு சென்றுள்ளார்.
இந்த ஜோடி அரையிறுதியில் தாமஸ் மாக்ஹாக் மற்றும் Zhizhen Zhang ஆகிய இணையை சந்திக்கிறது.
உலக டென்னிஸ் தரவரிசையில் இரட்டை பிரிவு வீரர்களின் பட்டியலில் 43 வயதான ரோஹன் போபண்ணா நம்பர் இடத்தை பிடித்துள்ளார்.
இதன்மூலம், டென்னிஸ் வரலாற்றில் நம்பர் 1 இடத்தை பிடித்த வயது மூத்த வீரர் என்ற பெருமையை போபண்ணா பெற்றுள்ளார்.