IND vs SA: சூர்யகுமார் சதம்... குல்தீப் சுழலில் சுருண்ட தென்னாப்பிரிக்கா... Highlights இதோ!
ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இந்த முறையும் ஒப்பனிங் சொதப்பியது. கில் 8 ரன்களில் அவுட்டாக, அடுத்த பந்திலேயே திலக் வர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
ஜெய்ஸ்வாலுடன் சூர்யகுமார் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜெய்ஸ்வால் 60 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, ரிங்கு சிங்குடனும் சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
சூர்யகுமார் 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் 100 ரன்களை எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இந்திய அணி இதன்மூலம், 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது.
தொடக்க ஓவர்களிலேயே டாப் ஆர்டர் பேட்டர்கள் சரிந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் சிறப்பாக வீசினார்.
கீழ்வரிசை பேட்டர்களை அடுத்தடுத்து குல்தீப் யாதவ் விக்கெட் எடுக்க தென்னாப்பிரிக்கா 13.5 ஓவர்களிலேயே 95 ரன்களில் ஆல்-அவுட்டானது. குல்தீப் யாதவ் மொத்தம் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. மேலும், ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வென்றார்.