பைக் ஓட்டுபவர்கள் கவனத்திற்கு.. இது உங்களை பிரச்சனையில் இருந்து காப்பாற்றும்!
சிறந்த எஞ்சின் ஆயில் எஞ்சினின் செயல்திறனை அதிகரிக்கும், அதன் ஆயுளையும் நீட்டிக்கும். என்ஜின் ஆயிலின் அளவை அவ்வப்போது சரிபார்க்கவும். அதேவேளையில் எஞ்சின் ஆயில் கசியாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். அழுக்கான எஞ்சின் எண்ணெயுடன் பைக்கை ஓட்ட வேண்டாம். இதனால் எஞ்சினின் மைலேஜ் மற்றும் செயல்திறன் பாதிக்கப்படலாம்.
எஞ்சினை அவ்வப்போது சர்வீஸ் செய்யவும். கார்பரேட்டர் மற்றும் வால்வை அவசியம் சுத்தம் செய்யவும். ஒவ்வொரு 1500 கிலோமீட்டருக்கு பிறகும் கார்பரேட்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஸ்பார்க் பிளக்கையும் கவனித்துக் கொள்ளுங்கள். 4-ஸ்ட்ரோக் பைக்குகளில், ஒவ்வொரு 1500 கிலோமீட்டருக்கு பிறகும் ஸ்பார்க் பிளக்குகளை மாற்ற வேண்டும்.
கிளட்சை மிகவும் இறுக்கமாக வைக்க வேண்டாம். பைக்கில் செல்லும் போது கிளட்ச் இலகுவாக இருக்க கிளட்சில் ஃப்ரீ பிளே வையுங்கள்.
பேட்டரியை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். ஒருவேளை கசிவு இருந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும். சில காலம் பைக் பயன்படுத்தாமல் இருந்தால், அதன் பேட்டரியை சார்ஜ் செய்வது அவசியம் ஆகும்.
ஏர் ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மாற்ற வேண்டும். டயர் நிலை மற்றும் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கவும். பிடிப்பு இல்லாத டயர்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
பைக் செயினை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். மென்மையான பிரஷின் உதவியுடன் செயினில் உள்ள மணலை அவ்வப்போது சுத்தம் செய்யவும்.