பில்கேட்ஸ், ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்! தெரியுமா?

Fri, 14 Jun 2024-6:17 pm,

தொழிலதிபரும், மஹிந்த்ரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்த்ராவை (Anand Mahindra) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் (Bill gates) கடந்த ஆண்டு நேரில் சந்தித்தார்.

இதனை எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா அப்போதே தெரிவித்தார். மேலும், பில்கேட்ஸ் தன்னை சந்தித்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். 

இதுகுறித்து ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்டரில், “பில் கேட்ஸை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. எங்கள் இரு குழுக்களின் முழு உரையாடலும் ஐடி பற்றியோ, தொழில் பற்றியோ இல்லை. 

சமூக தாக்கத்தை எப்படி பெருக்குவது என்பது பற்றியே இரு தரப்பும் பேசினோம். இதில் எனக்கு ஒரு லாபமும் இருக்கிறது. அவரின் புத்தகம் ஆட்டோகிராப் உடன் இலவசமாக கிடைத்தது” என்று தெரிவித்திருந்தார்.

அப்போது ஆனந்த் மஹிந்த்ராவுக்கு பில் கேட்ஸ் பரிசாக புத்தகம் ஒன்றை அளித்திருந்தார். அந்த புத்தகத்தில், “ஆனந்துக்கு, எனது வகுப்பு தோழனுக்கு வாழ்த்துகள்” என்று எழுதி ஆட்டோகிராப் இட்டிருந்தார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களோ, பில் கேட்ஸும், ஆனந்த் மஹிந்த்ராவும் வகுப்பு தோழர்களா என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பினார்கள். இன்று மிகப்பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் பில் கேட்ஸும், ஆனந்த் மஹிந்த்ராவும் ஒரு காலத்தில் கல்லூரி வகுப்பு தோழர்கள்தான்.

1970களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பில் கேட்ஸும், ஆனந்த் மகிந்த்ராவும் ஒரே வகுப்பில் படித்தனர். எனினும், இரண்டே ஆண்டுகளில் பில் கேட்ஸ் தனது படிப்பை நிறுத்திக்கொண்டார். 1977ஆம் ஆண்டில் ஆனந்த் மஹிந்த்ரா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

2005ஆம் ஆண்டில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மாநாட்டில் ஆனந்த் மஹிந்த்ரா பங்கேற்றார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், மஹிந்த்ரா குழுமமும் இணைந்து பல்வேறு கூட்டு முயற்சிகளையும் நடத்தியிருக்கின்றன. ஒரு காலத்தில் கல்லூரி வகுப்பு தோழர்களாக இருந்தவர்கள் இப்போது பிஸ்னஸ் பார்ட்னர்களாகவும் இருந்து வருகின்றனர் என்பது ஆச்சிரியமான விஷயம் தான்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link