சனி பெயர்ச்சி 2025: சனி அருளால் புத்தாண்டில் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவைதான்
சனி பகவான் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாள் தற்போதிருக்கும் கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பணி இடத்தில் உயர்வு இருக்கும்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் நன்மைகள் உண்டாகும். புத்தாண்டில் மார்ச் மாத சனி பெயர்ச்சி இவர்களது வாழ்வில் பல வித நல்ல திருப்பங்களை கொண்டு வரும். வாழ்வில் பல வித சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்லுறவு இருக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி பல வித நல்ல செய்திகளை கொண்டு வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பான பலன்களைத் தரும். 2025-ம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சி இவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வெற்றியை அடைவார்கள். இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
கும்பம்: 2025-ல் மீன ராசியில் சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் அனைத்தும் நல்லபடியாக நடந்துமுடியும். நிதி ஆதாயம் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டு கும்ப ராசியினருக்கு மகிழ்ச்சியைத் தரும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சி பல வித நல்ல பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பணி இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள்.
சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நமக்கு பலன்களை அளிக்கும் நீதியின் கடவுள். அவர் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர். ஏழை எளியவர்களிடம் பரிவு காட்டி அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை போன்றவற்றை அவ்வப்போது தானம் செய்து உதவும் நபர்களை அவர் எப்போதும் சோதிப்பது இல்லை.
ஏழரை சனியின் தாக்கங்கள் குறைந்து சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் கூறலாம். இது தவிர, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.