சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகள் மீது அருளை பொழிவார் சனி
சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், ஒவ்வொரு ராசியிலும் இவர் அதிக நாட்களுக்கு இருக்கிறார். இதனால் ராசிகளில் அவரது தாக்கமும் மிக அதிகமாக இருக்கும்.
தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் இந்த ஆண்டு ஜூன் மாதம் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் (Zodiac Signs) இருக்கும். எனினும், சில ராசிகளில் இது அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும். இவர்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம், கௌரவம் ஆகியவற்றை சனி தருவார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி அதிக நற்பலன்களைத் தரும். இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் பணம் பெறுவீர்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். இந்த நேரம் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். தொழில் சம்பந்தமான பெரிய லட்சியங்கள் நிறைவேறும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி பல நன்மைகளை அளிக்கும். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் சனியின் நட்பு கிரகம். எனவே, ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் எப்பொழுதும் கருணை காட்டுகிறார். இவர்களுக்கு சனி சஞ்சரித்தவுடன் புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பார்த்ததை விட சிறந்த பலன்களைப் பெறலாம். புதிய தொழில் தொடங்கலாம். வருமானத்தில் அபரிமிதமான அதிகரிப்பு ஏற்படலாம்.
மகர ராசிக்கு அதிபதியான சனி வக்ர நிவர்த்தி அடைந்து இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருவார். சனி இவர்களுக்கு அதிக செல்வத்தை கொடுப்பதுடன் பேச்சின் செல்வாக்கையும் அதிகரிப்பார். இந்த காலத்தில் திடீர் பண வரவு இருக்கும். தொழிலில் உயர் பதவியை அடைவார்கள். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். உங்கள் லாபம் அதிகரிக்கும். சிக்கிய பணம் மீட்கப்படும். உங்கள் வாழ்க்கையில் இந்த நேரம் அனைத்துத் துறைகளிலும் நன்மைகள் கிடைக்கும்.
சனி பகவானின் அருளை பெற இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்: 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்!!'
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.