ரயில் டிக்கெட் IRCTC ஆப் மூலம் புக் செய்கிறீர்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

Mon, 21 Oct 2024-4:58 pm,

தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் இந்திய ரயில்வேயில் முன்பெல்லாம் ரயில் டிக்கெட்டுகளைப் பெற நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது வீட்டில் இருந்தபடியே சில நொடிகளில் எந்த ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தாலும் டிக்கெட் புக் செய்துவிடலாம்.

அதற்காக ஐஆர்சிடிசி இணையதளம் உள்ளது, இதன் மூலம் வீட்டில் அமர்ந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த IRCTC இணையதளம் ரயில் டிக்கெட் முன்பதிவை மிகவும் எளிதாக்கியுள்ளது. நீங்களும் ரயிலில் எங்காவது செல்ல விரும்பினால், ஐஆர்சிடிசி மூலம் எப்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். 

 

அதற்காக ஐஆர்சிடிசி இணையதளம் உள்ளது, இதன் மூலம் வீட்டில் அமர்ந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த IRCTC இணையதளம் ரயில் டிக்கெட் முன்பதிவை மிகவும் எளிதாக்கியுள்ளது. நீங்களும் ரயிலில் எங்காவது செல்ல விரும்பினால், ஐஆர்சிடிசி மூலம் எப்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். 

IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய, முதலில் நீங்கள் ஒரு கணக்கை (IRCTC Account) உருவாக்க வேண்டும். இந்தக் கணக்கு மூலம் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் Google Play Store அல்லது App Store இலிருந்து IRCTC இன் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கவும். IRCTC இணையதளத்திலும் இந்த அக்கவுண்டை உருவாக்க முடியும்.

 

ஐஆர்சிடிசி செயலியை இன்ஸ்டால் செய்த பிறகு நிறுவிய பின், "Register" ஆப்சனை கிளிக் செய்யவும். உங்கள் பெயர், மின்னஞ்சல், மொபைல் எண் போன்ற தேவையான தகவல்களை நிரப்புங்கள். 

 

இதற்குப் பிறகு, நீங்கள் User Name மற்றும் கடவுச்சொல்லை அமைக்க வேண்டும். பின்னர் அக்கவுண்ட் சரிபார்ப்புக்கு இமெயில் மற்றும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை சரியாக செய்யுங்கள். 

இதன்பிறகு லாகின் செய்து ஏறும் இடம், புறப்படும் இடம், பயண தேதி உள்ளிட்டால் அந்த தேதியில் உள்ள ரயில்கள் விவரம் காட்டும். அதில் உங்களுக்கு உகந்த ரயிலை தேர்வு செய்து, பயணிகள் விவரத்தை உள்ளிட்டு டிக்கெட் புக்கிங் செய்யவும்

 

நீங்கள் அவசரகாலத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், IRCTC உடனடி முன்பதிவு வசதியையும் வழங்குகிறது. தட்கல் டிக்கெட் முன்பதிவு பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக காலை 10 மணிக்கும் (ஏசி வகுப்பிற்கு) காலை 11 மணிக்கும் (ஸ்லீப்பர் வகுப்பிற்கு) திறக்கப்படும். பயணத்திற்கு முன் உங்கள் PNR நிலையைச் சரிபார்த்து, உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link