Brain Boosters: ஞாபக மறதியை ஓட விரட்டும் `SUPER` உணவுகள்!
நினைவாற்றல் சிறப்பாக இருந்தால், மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். மூளைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, அனைவரும் தங்கள் உணவில் ஏராளமான பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பதோடு, சால்மன் போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், அடர் பச்சை இலை காய்கறிகள் போன்ற மூளைக்கு அதிக ஆற்றலை வழங்கும் உணவுகளையும், கூடுதலாக கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவையும் மூளைக்கான சிறந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்.
வாதுமை பருப்பு (Walnut) : பார்ப்பதற்கு மூளை போலவே தோற்றமளிக்கும் வாதுமை கொட்டை, உண்மையிலேயே மூளைக்கு சூப்பர்ஃபுட் ஆகும். இது மூளைக்கு பல வழிகளில் பயனளிக்கும். வாதுமை கொட்டையில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (தாவர அடிப்படையிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலம்), பாலிபினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது. ஒமேகா -3 (Omega-3) கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதால், மூளைக்கு தேவையான முக்கிய உணவாகக் கருதப்படுகின்றன.
பாதம் பருப்பு (Almond): மூளையில் அசிடைல்கொலின் (acetylcholine) அளவை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. வைட்டமின் பி 6, ஈ, துத்தநாகம் மற்றும் அதில் காணப்படும் புரதங்கள் நரம்பியக்கடத்தி இரசாயனத்தை உருவாக்குகின்றன. இது மூளை சுறுப்பாக இயங்கவும், நினைவாற்றலை பெருக்கவும் உதவுகிறது.
முந்திரி (Cashew): முந்திரி ஒரு நல்ல மெமரி பூஸ்டர். இதில் பாலி-சாசுரேடட் மற்றும் மோனோ-சாசுரேடட் (poly-saturated and mono-saturated) கொழுப்புகள் உள்ளன. அவை மூளை செல்கள் உற்பத்திக்கு மிகவும் முக்கியம். இதனால் மூளை ஆற்றல் அதிகரிக்கும்.
நட்ஸ் வகைகள்: உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், கொட்டைகள் உட்கொள்வது நினைவாற்றலை மேம்படுத்துதோடு, மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது என்கிறார். இதனுடன் கவனச்சிதறலை போக்கி, மனதை ஒருமுகபடுத்துகிறது. கொட்டைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் கே, ஏ, சி, பி 6, ஈ, கால்சியம், மாங்கனீசு, இரும்பு, துத்தநாகம் ஆகியவை அடங்கியுள்ளன. அவை உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும்.