தொப்பை கொழுப்புக்கு No, ஒல்லி பெல்லிக்கு Yes சொல்ல இந்த காலை உணவுகளை சாப்பிடுங்க போதும்
முட்டை எப்போதுமே ஒரு சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. இது நாள் முழுதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைக்கும். மேலும், இது உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதால், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் இட்லியில் கொழுப்பு குறைவாக இருக்கும். இதற்கு சிறந்த சைட் டிஷ்ஷாக கருதப்படும் சாம்பாரில் பல்வேறு காய்கறிகள் மற்றும் பருப்பு இருப்பதால் இதுவும் ஆரோக்கிய நன்மைகளை கூட்டுகின்றது. இது மதிய உணவு வரை பகலில் பசியைக் கட்டுப்படுத்தி, கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.
நார்ச்சத்து மற்றும் காம்ப்ளேக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள ஓட்ஸ் சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிறைவான உணர்வை அளிக்கின்றது.
புரதம் நிறைந்த காலை உணவை உட்கொள்வது தொப்பை கொழுப்பை குறைக்கவும், எடை இழப்புக்கும் ஒரு சுலபமான வழியாக பார்க்கப்படுகின்றது. புரதச்சத்து அதிகமாக உள்ள பனீர் பராந்தாவுடன் ஒரு கிண்ணம் குறைந்த கொழுப்புள்ள தயிர் உட்கொள்வது காலை உணவுக்கான நல்ல தேர்வாக இருக்கும்.
பச்சைப்பயறு கொண்டு செய்த அடையில் பல வித காய்கறிகளை சேர்த்து உட்கொள்வதால் உடலுக்கு புரதச்சத்தும் நார்ச்சத்தும் கிடைப்பதுடன் தொப்பை கொழுப்பும் குறைகிறது. இதில் மிகக் குறைந்த கலோரிகளே உள்ளன.
சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது நிறைவான உணர்வை அளிப்பதோடு தொப்பை கொழுப்பை மிக விரைவில் குறைக்கிறது.
முளைகட்டிய பயறு வகைகளை சாட் செய்து சாப்பிடுவது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் முளைத்த பயறுகளை உட்கொண்டால் உடலுக்கு நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. இதனால் எடையும் கூடாது.
காய்கறிகள் சாலட், பழங்கள், பழச்சாறுகள் ஆகியவை கலோரிகளை அதிகரிக்காமல் நமது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றன. இவற்றால் பல வித ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.