Airtel, Jio, Vi-க்கு போட்டியாக, BSNL வழங்கும் மெகா ரீசார்ஜ் திட்டம்!

Thu, 06 May 2021-5:52 pm,

இணைய பயன்பாடு அதிகரித்துள்ள இந்த கொரோனா காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே போட்டி வேகமாக அதிகரித்து வருகிறது. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களது குறைந்த கட்டண ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 

சமீபத்தில், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தனது மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக கருதப்படுகிறது. இது மலிவான திட்டங்களில் ஒன்றாகும்.

BSNL அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் காரணமாக, ஏர்டெல் (Airtel), ஜியோ(Jio) மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) போன்ற நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்துள்ளது.

 

BSNL ரீசார்ஜ் திட்டம் ரூபாய் 47 இந்த ரூபாய் 47 ரீசார்ஜ் திட்டத்தில், நீங்கள் வரம்பற்ற அழைப்பு, தினசரி 1 ஜிபி தரவு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம். 

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்  ஆகியவற்றின் மலிவான திட்டங்கள் மற்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களைப் பார்த்தால், ஏர்டெல்லில் 100 ரூபாய்க்கும் குறைவான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இதில் 79 ரூபாய் மற்றும் 49 ரூபாய் திட்டம் உள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும், பயனர்கள் 200MB தரவை மட்டுமே பெறுகிறார்கள். அதே நேரத்தில், ஜியோ ரூ .51 மற்றும் ரூ .21 திட்டத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும், இவை இரண்டும் டாப்-அப் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதேபோல், வோடபோன்-ஐடியா ரூ 48 மற்றும் ரூ 98  ஆகிய கட்டணங்களில் இரண்டு திட்டங்களையும் வழங்குகிறது. இதில் உங்களுக்கு குறைந்த நன்மைகள் தான் உள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link