BSNL 5G: பிஎஸ்என்எல் 5ஜி சேவை மிக விரைவில்... வெளியான முக்கிய அப்டேட்

Mon, 09 Sep 2024-10:54 am,

பிஎஸ்என்எல் 5ஜி சேவை: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த சில மாதங்களாக தனது நெர்ட்வொர்க்கை வலுப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்க மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் முதல் 4G டவர்களை நிறுவது வரை, அரசு டெலிகாம் நிறுவனம் இப்போது தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட தயாராகி வருகிறது. 

பிஎஸ்என்எல் வழங்கிய முக்கிய அப்டேட்: இந்நிலையில், பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. BSNL நிறுவனம் அதன் 5G சேவைகளை மிக விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. எனவே மிக விரைவில் பிஎஸ்என்எல் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும்.

2025 ஜனவரியில் 5G சேவை: ஆந்திரப் பிரதேசத்தின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) முதன்மை பொது மேலாளர் எல். ஸ்ரீனு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​பிஎஸ்என்எல் தனது 5ஜி சேவையை 2025 ஜனவரி மாதத்தில்தொடங்க தயாராகி வருவதாக அறிவித்தார். 

பிஎஸ்என்எல் 5G சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5G சேவையை தொடங்கும் வகையில், எளிதாக்குவதற்கு அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் டவர் அமைத்தல் மற்றும் பிற தேவையான உபகரணங்கள் வாங்குதல் ஆகியவை அடங்கும்.

4ஜி சேவையை 5ஜியாக மாற்றும் பணி: பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை 5ஜியாக மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் 5ஜி சேவையை தொடங்க அதிக முதலீடு தேவைப்படாது. பிஎஸ்என்எல் ஏற்கனவே தனது 4ஜி சேவைகளை தொடங்கியுள்ள பகுதிகளில் 5ஜி சேவை தொடங்கும். 

பெருநகரங்களில் 5ஜி சேவை: 5ஜி சேவை எந்தெந்த நகரங்களில் இந்த சேவையை முதலில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும், மும்பை மற்றும் டெல்லியில் 4G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தக் கூடும் என BSNL சூசகமாக தெரிவித்துள்ளது. 

அதிவேக இண்டர்நெட் இணைப்பு : BSNL 5ஜி சேவை தொடர்பாக நிறுவனம் பகிர்ந்துள்ள வீடியோவில் BSNL மற்றும் MTNL இரண்டின் லோகோக்கள் உள்ளன. அதில் அதிவேக இணைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், BSNL 5G சேவை விரைவில் தொடங்கப்படும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

BSNL 5G சேவை: பெருநகரங்களில் 5G சேவை: BSNL நிறுவனம் தனது 5G சேவைகளை சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய பெருநகரங்களில் விரைந்து தொடங்க திட்டமிட்டுள்ளது என முன்னதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link