8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 44% உயரும் ஊதியம்.. மிக விரைவில் நல்ல செய்தி!!
அடுத்த ஆண்டு மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆவது ஊதியக்குழு குறித்த பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது ஊதியக் குழுவிற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 ஆவது ஊதியக்குழு வந்தால், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய உயர்வு இருக்கும். அடுத்த ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு இந்தப் பரிசை வழங்கலாம். 8வது சம்பள கமிஷன் வராது என்ற விவாதம் இதுவரை நடந்து வந்தது. ஆனால், தற்போது 7வது ஊதியக் குழுவின் சமீபத்தியச் செய்திக்குப் பிறகு, அடுத்த ஊதியக் குழுவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும். ஊழியர்களை மகிழ்விக்க அரசு புதிய ஊதியக் குழுவை அமைக்க வாய்ப்புள்ளது. 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும்.
புதிய ஊதியக்குழுவில் என்ன இருக்கும், என்ன இருக்காது என்பதை தற்போது கூறுவது கடினம். ஏனெனில், அதன் முழுப் பொறுப்பும் ஊதியக் குழுவின் தலைவரிடம் இருக்கும்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக புதிய ஊதியக் குழுவின் தலைவரும் அறிவிக்கப்படலாம். அவரது மேற்பார்வையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதன்பிறகு எந்தெந்த பார்முலாவில் சம்பளத்தை உயர்த்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
8வது ஊதியக் குழு 2024 ஆம் ஆண்டில் அமைக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறிவிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குள் அது செயல்படுத்தப்படலாம். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும்
7வது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது 8வது ஊதியக் குழுவில் பல மாற்றங்கள் இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் சில மாற்றங்கள் இருக்கலாம். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊதியக் குழுவை அமைக்கிறது.
8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன், ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கும். மேலும், எந்த ஃபார்முலாவாக இருந்தாலும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 44.44% அதிகரிப்பு இருக்கும். இது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தியாக இருந்தது.
8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், இம்முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கப்படும். அதனால் ஊழியர்களின் சம்பளம் 18 ஆயிரத்தில் இருந்து 26 ஆயிரமாக உயரும்.