மீனத்தில் சூரியன்: நாளை முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம், வாழ்க்கை ஜொலிக்கும்

Wed, 13 Mar 2024-4:32 pm,

சூரியன் பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு நிதிநிலை மேம்படும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு பண வரவும் அதிகமாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகமாகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்

சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். உங்கள் அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். நிதி நிலை மேம்படும். குடும்ப பொறுப்புகளை நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு தற்போது மக்களின் பரிபூரணமான ஆதரவு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்

உங்கள் திடமான மன உறுதியால் கடினமான நிலைமைகளையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். தான தர்மங்களை செய்வீர்கள்.. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்

பணியிடத்தில் சிக்கல்கள் இருக்கும். அதிகப்படியான கவனத்துடன் இருப்பதே நல்லது. எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்து ஒரு பிரச்சினைக்கு இப்பொழுது தீர்வு கிடைக்கும்

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு மேலோங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலைச்சல் அதிகரிக்கும். நிதி நெருக்கடி ஏற்படலாம். சிக்கனம் தேவை. அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கு இப்போது சாதமான நேரமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். 

குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புது தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. காதல் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் இருக்கும், இருப்பினும் காதல் திருமணம் குறித்து முடிவு எடுக்க நினைத்தால் நல்ல வாய்ப்பு அமையும். உயர் அதிகாரிகளுடனான உறவுகள் வலுவடையும். அரசுத் துறைகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மன அமைதியின்மை ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொத்து சம்பந்தமான விஷயங்களில் உள்ள சிக்கல்கள் தீரும். உங்கள் சொந்தங்களே உங்களை அவமானப்படுத்த முயற்சி செய்யலாம், கவனமாக இருங்கள். இதையெல்லாம் மீறி, குடும்பத்தில் புதிய விருந்தாளியின் வருகையால் சூழல் இனிமையாகவே இருக்கும். எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக இருக்கும்.

குடும்பத்தில், குறிப்பாக இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர விடாதீர்கள். மதம் மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆதரவற்ற மக்களுக்கு உதவ முன்வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். சிக்கிய பணமும் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல்நலம், குறிப்பாக வலது கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருங்கள். உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 

அரசுத் துறைகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வணிகத்தில் அதிகப்படியான லாபத்தை காண்பீர்கள்

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link