குரு பெயர்ச்சி: கஜலட்சுமி ராஜயோகத்தால் 3 ராசிகளுக்கு ஓஹோன்னு வாழ்க்கை, உச்சக்கட்ட லாபம்
குரு பகவான் 22 ஏப்ரல் 2023 அன்று தனது ராசியை மாற்றுகிறார். தற்போது குரு மீன ராசியில் இருக்கிறார். ஏப்ரல் மாதம் அவர் பெயர்ச்சியாகி மேஷ ராசிக்குள் நுழைவார். அந்த நேரத்தில் சந்திரனும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது வியாழன் மற்றும் சந்திரனின் சேர்க்கை கஜலக்ஷ்மி யோகத்தை உண்டாக்கும்.
கஜலக்ஷ்மி யோகம் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தை நீக்குகிறது. இந்த சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், கஜலக்ஷ்மி யோகம் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும்.
வேலை தேடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். உங்கள் பணி பாராட்டப்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால், அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். வருமானத்தில் உயர்வு இருக்கும். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி யோகம் திடீர் பண பலன்களைத் தரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வேலைக்கு ஏற்ற நேரமாக இது இருக்கும்.