38 நாட்களில் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள், பொற்காலம் ஆரம்பம்
கடவுள்களின் குருவான வியாழன், அதிர்ஷ்டம், செல்வம், திருமணம் ஆகியவற்றின் காரணி ஆவார். அதன்படி மே மாதம் 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு இந்த ஆண்டின் குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) நடக்கப் போகிறார்.
மே 1ஆம் தேதி ரிஷப ராசியில் குரு பெயர்ச்சியடையப் போகிறார். இந்த நிகழ்வு 12 வருடங்கள் கழித்து நடக்கப் போகிறது. எனவே, குரு ரிஷபத்தில் நுழைவது ஒரு பெரிய நிகழ்வு. குரு பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருந்தாலும், 4 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சுப பலன்களைத் தரும். வேலையில் வெற்றி பெறுவார்கள். நிதி ஆதாயம் உண்டாகும். நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்வில் பல நல்ல மாற்றங்களை பெறலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பணியிடத்தில் பெரிய மரியாதை அல்லது சாதனையை அடைவீர்கள். சமய காரியங்களில் ஆர்வம் கூடும்.
கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். வேலையில் வெற்றி கிடைக்கும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும். பொருள் சுகம் கூடும். வருமானம் அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தாம்பத்திய உறவு சிறப்பாக இருக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் தேடு வரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.