2023-ல் இந்த ராசிகள் மீது அருள் மழை பொழிவார் சனிபகவான்: ராஜயோகத்தில் திளைப்பார்கள்
இந்து நாட்காட்டியின்படி, சனி பகவான் 23 அக்டோபர் 2022 அன்று மகர ராசியில் வக்ர நிவர்த்தி பெற்றார். ஜனவரி 17, 2023 வரை, சனி மகர ராசியில் தனது இயல்பான இயக்கத்தில் இருப்பார். சனி பலவான் வக்ர நிலையில் இருக்கும்போது ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையில் தாக்கத்தில் உள்ளவர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும். ஜனவரி 17, 2023 அன்று, 08.02 நிமிடங்களுக்கு, சனி பகவான் மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசியில் நுழைகிறார்.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டில் ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்பத்தை ஆளும் கிரகம் சனி. ஆகையால், கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் கும்பம் போல, அபரிமிதமான உச்ச நிலை பலன்களை அளிப்பார்.
சனியின் மாற்றத்துடன் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் நடந்துமுடியும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சனியின் மாற்றத்தால் துலா ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மன நிம்மதி கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் / மனைவி, குழந்தைகள் இடையே அன்பு அதிகரிக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்த பல பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.