Calcium Rich Foods: கால்சியம் அபாரமாக உள்ள உணவுகளின் பட்டியல்
பாலில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. கால்சியம் குறைபாடும் இருந்து பால் அலர்ஜியாக இருந்தால் அவர்கள் கால்சியத்திற்கான மாற்றை தேட வேண்டும்
இரும்புச்சத்து நிறைந்த ராகி மாவில் கால்சியம் சத்தும் அதிகமாக உள்ளது. பாலை விட கால்சியம் அதிகம் உள்ள உணவுகளில் ராகியும் ஒன்று. ராகியை ரொட்டியாகவும், தோசையாகவும் செய்து சாப்பிடலாம்.
காய்கறிகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதோடு, அதிக அளவு கால்சியமும் உள்ளது. அதனால், கீரை, வெந்தயம், பச்சை வெங்காயம், கோஸ், போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரமாகக் கருதப்படும் பாதாம் கால்சியத்தின் நல்ல மூலமாகும். பாதாம் பருப்பை உட்கொள்வதன் மூலம் போதுமான அளவு கால்சியம் கிடைக்கிறது
கால்சியம் குறைபாடு இருந்தால், எலும்புகள் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். எலும்பு வலி, எலும்புகள் பலவீனம், உடல் வலி மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை கால்சியம் குறைவாக இருந்தால் ஏற்படும்