10th மற்றும் 12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..எழுதப்படிக்க தெரிந்தால்போதும்!!

Sun, 01 Dec 2024-12:04 pm,

மரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ. டபிள்யூ. எஸ். டி) கல்லூரி நூலக தகவல் உதவியாளர், லோயர் டிவிஷன் கிளார்க் மற்றும் மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (MTS) பணியிடங்களை நிரப்பத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்ட கீழ் கொடுக்கப்பட்ட தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் வைத்திருந்தால் வாய்ப்பினை தவறவிடாமல் உடனடியாக விண்ணப்பம் செய்து அரசு வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவும். 

மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IWST)பணியின் பெயர் Library Information Assistant இந்த வேலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 1 உள்ளன. இதற்கான கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கான வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

 

மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IWST)பணியின் பெயர் Lower Division Clerk இந்த வேலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 04 உள்ளன. இதற்கான கல்வித் தகுதி  அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் அல்லது கணினியில் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம். மேலும் இந்த வேலைக்கான வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

 

மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IWST) பணியின் பெயர் Multi-Tasking Staff (MTS) இந்த வேலையில் காலியிடங்களின் எண்ணிக்கை 12 உள்ளன. இதற்கான கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் படிவம் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பள்ளி. மேலும் இந்த வேலைக்கான வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் இந்த வேலைக்கான வயது தளர்வு SC/ST-5 ஆண்டுகள், OBC-3 ஆண்டுகள், PwBD (Gen/EWS)-10 ஆண்டுகள், PwBD (SC/ST)-15 ஆண்டுகள், PwBD (OBC)-13 ஆண்டுகள். 

மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IWST) இந்த வேலைக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது. இலவசமாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பணியை பின்வரும் முறையின் அடிப்படையில் தேர்வு செய்து வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யும் முறை: மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS)-எழுத்துத் தேர்வு, நூலக தகவல் உதவியாளர்-எழுத்துத் தேர்வும், கீழ் பிரிவு மற்றும் எழுத்தர்-எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு வைத்து இதன் அடிப்படையில் பணி நியமனத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 

மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IWST) வேலைக்கு விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.11.2024 மற்றும் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 03.01.2025. இந்த பணிக்கு மேல் குறிப்பிட்டுள்ள தகுதிகள் அனைத்தும் இருந்தால் நிச்சயம் வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தினை https://iwst.icfre.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

இந்த பணிக்காக நீங்கள் விண்ணப்பித்ததைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The director, Institute of Food Science and Technology, 18th cross, Malleswaram, Bangalore – 560003

விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கும்போது கேட்கப்படும் அனைத்து சான்றிதழ்கள் சரியான முறையில் நேர்மையாக சமர்ப்பிக்க வேண்டும். ஏதேனும் தவறுதலாக சமர்ப்பணம் செய்தால் நீங்கள் விண்ணப்பம் செய்தது நிராகரிக்கப்படும். எனவே பின்வரும் சான்றிதழ்கள் மற்றும் தகுதிகள் உங்களிடம் சரியாக இருந்தால் மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்க முன்வர வேண்டும். இதுகுறித்து மேலும் ஏதேனும் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். https://iwst.icfre.gov.in/docs/Recruitment%20Notification%20(LIA,%20LDC,%20MTS).pdf

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link