சந்திரமுகி கேரக்டர் சொர்ணாவா இது? வடிவேலுவின் மனைவியாக நடித்தவரின் ரீசண்ட் போட்டோஸ்!
சந்திரமுகி திரைப்படத்தில் வந்த முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒன்று, ஸ்வர்ணா. வடிவேலுவின் மனைவி கேரக்டரான இது, படத்தில் காமெடிக்காக பல இடங்களில் உபயோகப்படுத்த பட்டிருக்கும்.
சந்திரமுகி சொர்ணாவின் உண்மையான பெயர் சொர்ணா மேத்யூ.
இவர் நடித்திருந்த பெட்ஷீட்டிற்குள் ஆவி பிடிக்கும் காட்சி பலரை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.
சொர்ணா, தாய் மனசு போன்ற படம் மூலம் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து மாயா பஜார், பெரிய தம்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
துணை கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்திருக்கும் சொர்னா, திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகி விட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கும் சென்று செட்டிலாகி விட்டார்.
இவர், கேரளாவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு கேரளா புடவை அணிந்து இவர் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள், அந்த சொர்ணாவா இது என்று கேட்டு ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.