இந்தியாவின் Cheap and best டாப் 5 மின்சார கார்கள்: வியக்க வைக்கும் விலை, அம்சங்கள்

Wed, 08 Sep 2021-6:29 pm,

டாடா டிகோர் ஈவி (Tata Tigor EV) செடான் இந்தியாவின் புதிய மின்சார கார் ஆகும். மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படும் இந்த கார், வெறும் 5.7 வினாடிகளில் 0 முதல் 60 கிமீ வேகத்தில் பறக்கிறது. டிகோர் EV மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: XE, XM, XZ+ (XZ+ Dual Tone ஆப்ஷனும் கிடைக்கிறது).

டாடா டிகோர் ஈவி விலை: ரூ 11.99 லட்சம் முதல் ரூ 13.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

டாடா டிகோர் ஈவி ரேஞ்ச்: 306 கிமீ

டாடா நெக்ஸான் ஈவி 9.9 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி, பேட்டரி மற்றும் மோட்டார் மீது 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ -க்கான உத்தரவாதத்தை வழங்குகிறது.

இந்த கார் 30.2 கிலோவாட் பேட்டரியால் இயக்கப்படுகிறது. வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 60 நிமிடங்களில் அதன் பேட்டரியை 0 முதல் 80% வரை சார்ஜ் செய்யலாம்.

டாடா நெக்ஸான் ஈவி விலை: ரூ .13.99 லட்சம் முதல் ரூ .16.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

டாடா நெக்ஸான் ஈவி ரேஞ்ச்: 312 கிமீ

மஹிந்திரா இ-வெரிட்டோ இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பகால மின்சார நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றாகும். இந்த கார் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், ஒரு மணி நேரத்தில் 86 கிமீ வேகத்தை அடைய முடியும். வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் மூலம், விரைவான சார்ஜரை (ஃபாஸ்ட் சார்ஜர்) பயன்படுத்தி, மஹிந்திரா இ-வெரிட்டோவை ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில் வீட்டிலேயே சார்ஜ் செய்ய முடியும். மஹிந்திரா இ-வெரிட்டோ விலை: ரூ. 12.95 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்) மஹிந்திரா இ-வெரிட்டோ வரம்பு: 140 கி.மீ

MG ZS EV, EXCITE மற்றும் EXCLUSIVE ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, ZS EV ஐ 50 நிமிடங்களில் 0 முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். அதே நேரத்தில் வீடுகளில் நிறுவப்படும் AC ஃபாஸ்ட் சார்ஜர்கள் முழு சார்ஜுக்கு சுமார் 6 - 8 மணி நேரம் எடுக்கும்.

MG ZS EV விலை: ரூ. 20.99 லட்சம் முதல் ரூ .24.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) MG ZS EV வரம்பு: 419 கிமீ

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார கார்களில் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஒன்றாகும். இந்த நான்கு சக்கர வாகனம், ஒரு டி.சி க்விக் சார்ஜர் மூலம் 80% சார்ஜை 57 நிமிடங்களில் அடைகிறது.

இந்த மின்சார கார் பல ஓட்டுநர் முறைகளையும் (Eco+, Eco, Comfort மற்றும் Sport) வழங்குகிறது.

விலை: ரூ .23.76 லட்சம் முதல் ரூ .23.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

வரம்பு: 452 கிமீ

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link