ரிலையன்ஸ் ஜியோ... 2ஜிபி டேட்டா வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான பல சலுகை திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள். தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட பல நன்மைகளும் கிடைக்கும்.
ஜியோ ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட பல நன்மைகளும் கிடைக்கும்.
ஜியோ ரூ. 448 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன், SonyLiv, Zee5, JioCinema Premium, Sun NXT போன்ற ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தா, ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும்.
ஜியோ ரூ.799 திட்டம்: ஜியோ ரூ. 779 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், Jio TV, JioCinema மற்றும் JioCloud போன்ற வசதிகளும் கிடைக்கும்
பிஎஸ்என்எல் 4G சேவை: பிஎஸ்என்எல் (BSNL), தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் ரீசார்ஜ் கட்டண உயர்வின் முலம் கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து, தனது 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
பட்ஜெட் ஒதுக்கீடு: மத்திய அரசும் பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கி ஊக்குவித்து வரும் நிலையில், நாடு முழுவதும் மிக விரைவில் 4ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்த பிஎஸ்என்எல், உடனடியாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாக 4ஜி நெட்வொர்க் டவர்களை நிறுவி, தனது பணியை துரிதப்படுத்தி வருகிறது.
6ஜி தொழில்நுட்பம்: சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும் தற்போது 6ஜி தொழில்நுட்பத்தை சோதனை முறையில் உருவாக்கி வருவதாகவும் கூறினார்.