UIDAI:ஆதார் கார்டு இலவச விண்ணப்ப கடைசித் தேதி நெருங்கியது...உடனடி விண்ணப்பம் வரவேற்பு!

Tue, 10 Dec 2024-3:20 pm,

ஆதார் கார்டில் இதைச் செய்ய முடியாது: பயோமெட்ரிக் விவரங்களை இணையத்தில் இலவசமாகப் புதுப்பிக்க முடியாது. பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். 

UIDAI இலவச புதுப்பிப்பு சேவையை அறிவித்துள்ளது. இந்த சேவை கடந்த சில மாதங்களாக நீடித்து வருகிறது. மார்ச் முதல் ஜூன் வரை, பின்னர் செப்டம்பர் மற்றும் இப்போது டிசம்பர் 14 வரை இறுதி காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.

உங்கள் ஆதார் அட்டையை எந்த செலவும் இல்லாமல் புதுப்பிக்க இது உங்களுக்குக் கடைசி வாய்ப்பாக இருக்கிறது. மீண்டும் அரசாங்கம் இந்த வாய்ப்பை தருவதற்கு வாய்ப்பு குறைவு. 

இந்த ஆதார் இலவச சேவை இலவசமாகப் பின்வரும் குறிப்பிட்ட விவரங்கள் அடிப்படையில் புதுப்பிக்கலாம். உங்கள் முகவரி, தொலைப்பேசி எண், பெயர் போன்ற விவரங்களுக்கான புதுப்பிப்புகளை மட்டுமே உள்ளடக்கியது. 

UIDAI மக்களுக்காக இலவசமாகப் புதுப்பிக்க ஒரு அறிய வாய்ப்பை வழங்குகிறது. இந்த வாய்ப்பை தவறவிடாமல் மக்கள் இதனைப் பயன்படுத்துமாறு ULDAI உங்களை வலியுறுத்துகிறது. மேலும் இதுபற்றிய முழுவிவரம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் ஆகும். இது பல்வேறு சேவைகள் மற்றும் நன்மைகளை மக்கள் பயனடைவதற்கு அவர்களிடம் இருந்து கேட்கப்படும் அடையாள அட்டையாக இது அனைத்து இந்தியர்களுக்கும் அமைந்துள்ளன. அரசு நலத் திட்டங்களில் சரியான முறையில் பெற இந்த அட்டை பயன்படுத்தப்படுகிறது. 

ஆதார் அட்டை முக்கியமாக வரி செலுத்துதல், பயணச்சீட்டு முன்பதிவு செய்தல் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சேவைகளைப் பெற உங்கள் விவரங்கள் துல்லியமாகவும் புதுப்பித்ததாகவும் இருக்க வேண்டும். 

டிசம்பர் 14 வரை உங்கள் ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்கலாம். முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் போன்றவற்றைப் புதுப்பிக்க இந்த சேவை உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

அனைத்து ஆதார் வைத்திருப்பவர்களும் தங்கள் விவரங்களைத் தவறாமல் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்துகின்றன. 15 வயதுள்ள சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் தரவு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தக் குழந்தைக்கு 15 வயதாகும்போது பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் தேவைப்படுகின்றன.பயோமெட்ரிக் மாற்றங்கள் என்பது கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள்) போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link