Chess Olympiad 2022: சதுரங்க போட்டிக்கு தயாராகும் சிங்கார சென்னை
திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சென்னையில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். படம்: IANS
கிராண்ட் மாஸ்டர் தேஜ்குமார், அர்ஜுனா விருது பெற்ற டி வி பிரசாத், கிராண்ட் மாஸ்டர் ஸ்டேனி ஜி மற்றும் 63வது கிராண்ட் மாஸ்டர் கிரிஷ் கௌசிக் ஆகியோர், பெங்களூரு விதான் சவுதா முன் 44வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றனர். படம்: IANS
சாதனை அளவாக 189 அணிகள் இந்த போடிகளில் பங்கேற்கின்றன. இது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இதுவரை காணப்படாத சாதனை அளவாகும். பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்கின்றன
செஸ் ஒலிம்பியாட் 2022 28 ஜூலை 2022 வியாழன் அன்று தொடங்கி ஆகஸ்ட் 10, 2022 புதன்கிழமை முடிவடையும். சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகின்றன. போட்டிகளை ஒட்டி, கருப்பு மற்றும் வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்ட நேப்பியர் பாலத்தில் வாகனங்கள் செல்வதை புகைப்படத்தில் காணலாம். படம்:PTI
சென்னையில் நடைபெறவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான மேஸ்காட்களுக்கு வண்ணம் பூசப்பட்டு இறுதி கட்ட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. படம்: PTI
ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அதிகாரப்பூர்வ மேஸ்காட் அதாவது சின்னத்தின் பெயர் ’செஸ் தம்பி’ ஆகும்.