வண்ணங்களில் ஜொலிக்கும் சென்னை மாநகராட்சி கட்டடத்தின் 5 தகவல்கள்
1913 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டடத்துக்கு சென்னையில் ஆட்சி செய்த பிரித்தானிய ஆளுநர் ரிப்பன் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை இருந்துள்ளார். 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை இருந்த அவர், மீண்டும் 2001 முதல் 2002 ஜூன் மாதம் வரை அப்பதவியில் இருந்தார்.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அதன்பிறகு யாரும் மேயராக இல்லை. இப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து திமுகவின் பிரியா மேயராக உள்ளார். அவருக்கு வயது 28.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநகராட்சிக் கட்டடத்தை புனரமைத்து, தமிழ் வாழ்க மற்றும் தமிழ் வளர்க என்ற பேனரை பொருத்தியுள்ளது. மேலும், நாள்தோறும் பல வண்ணங்களில் கட்டடம் ஜொலிக்க வைக்கப்படுகிறது. முக்கிய நாட்களுக்கு ஏற்ப வண்ணங்கள் மிளிர வைக்கப்படுகின்றன.