தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்
![சிஎஸ்கே CSK](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/21/435157-csk-retention1.png?im=FitAndFill=(500,286))
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கடந்த 2024 சீசனில் சிறப்பாக விளையாடி வந்தாலும் கடைசி கட்டத்தில் சொதப்பி 5ஆவது இடத்தில் நிறைவு செய்தது. இதனால், 2025 சீசனில் தோனி மீண்டும் வருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
![சிஎஸ்கே CSK](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/21/435156-csk-retention2.png?im=FitAndFill=(500,286))
அப்படியிருக்க, தொடர்ந்து ஐபிஎல் 2025 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) குறித்து பல அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தொடர்ந்து வெளி வரும் சூழலில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்தும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
![சிஎஸ்கே CSK](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/21/435155-csk-retention3.png?im=FitAndFill=(500,286))
அதாவது, ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கப்போகும் அந்த 5 வீரர்கள் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுகுறித்து இதில் காணலாம்.
ருதுராஜ் கெய்க்வாட்: தோனி இவரிடம் கேப்டன்ஸியை கொடுத்தபோதே அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே இவரை சுற்றிதான் தனது எதிர்கால திட்டங்களை வகுத்திருக்கும். அப்படியிருக்க அதிகபட்ச தொகையில் ருதுராஜ் கெய்க்வாட்டை (Ruturaj Gaikwad) தக்கவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மதீஷா பதிரானா: சிஎஸ்கே இவரை இன்னும் 5 வருடத்திற்கு நிச்சயம் விடுவிக்காது. மும்பைக்கு எப்படி மலிங்கா இருந்து கோப்பைகளை வென்று கொடுத்தாரோ அதேபோல் சிஎஸ்கேவை மேலும் சிகரத்திற்கு ஏற்றும் வல்லமை பதிரானாவிடம் (Matheesha Pathirana) இருப்பதால் இவரையும் நிச்சயம் சிஎஸ்கே தக்கவைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
ரவீந்திர ஜடேஜா: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் சிஎஸ்கேவின் தளபதியை தக்கவைக்காமல் விடுவார்களா என்ன... முக்கிய வீரரான ஜடேஜாவையும் (Ravindra Jadeja) பெரிய தொகையில் சிஎஸ்கே தக்கவைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சிவம் தூபே: மிடில் ஆர்டரில் சிஎஸ்கே எதிர்பார்க்கும் அதிரடியும், அவ்வப்போது பந்துவீசும் திறனமும் இருப்பதால் ஹர்திக் பாண்டியாவை போல் நல்ல வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இவரை வளர்க்க சிஎஸ்கே திட்டமிடும் என கணிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது ஷிவம் தூபே (Shivam Dube) தக்கவைக்கப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்எஸ் தோனி: ஆம்... 2025 சீசனில் தோனி (MS Dhoni) விளையாடுவது ஏறத்தாழ உறுதிதானாம்... அதேபோல் ஏலத்தின் விதிகளும் சரிப்பட்டு வரும் காரணத்தால் இன்னும் 1 சீசன் (?) தோனி விளையாட இருக்கிறார் என கூறப்படுகிறது. எனவே, கடைசி வீரராக தக்கவைக்க சிஎஸ்கேவும் தோனியும் பரஸ்பரம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.